Settings

முகப்பு/பொதுமக்கள் செய்திகள்/51வது பயனாளிக்கு இலவச வீட்டை வழங்கிய தொழிலதிபர் ஜெ.கிளமெண்ட்
பொதுமக்கள் செய்திகள்

51வது பயனாளிக்கு இலவச வீட்டை வழங்கிய தொழிலதிபர் ஜெ.கிளமெண்ட்

🕒 12 அக்., 2026, 05:31 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
51வது பயனாளிக்கு இலவச வீட்டை வழங்கிய தொழிலதிபர் ஜெ.கிளமெண்ட் - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •51வது பயனாளிக்கு இலவச வீட்டை வழங்கிய தொழிலதிபர் ஜெ.கிளமெண்ட்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பாரத் ஆக்சிஜன் நிறுவனரான ஜெ.கிளமெண்ட் சார்பில் 51வது பயனாளிக்கு இலவச வீடு வழங்கும் விழா புதுவாயலில் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பாரத் ஆக்சிஜன் நிறுவனரான ஜெ.கிளமெண்ட் வீடற்ற ஏழை எளியோர்களுக்கு இலவசமாக வீடு கட்டி தருகிறார். இது வரை அவர் 50 பேருக்கு இலவசமாக வீடு கட்டி தந்த நிலையில், அவர் குடியிருக்கு வீடில்லாமல் ஓரு அறை கொண்ட சிறிய குடிசையில் புதுவாயலை சேர்ந்த காமாட்சி,பவானி, சித்ரா குடும்பத்தாருக்கு 1லட்சத்து 75ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வீட்டை கட்டி தந்தார். இந்நிலையில் பயனாளிக்கு வீட்டினை ஒப்படைக்கும் விழா தொழிலதிபர் கிளமெண்ட், சிந்து கிளமெண்ட் தலைமையில் நிடைபெற்றது. நிகழ்வில் அம்மா சோப்பு தொழிற்சாலை நிறுவனர் அம்மா தங்கப்பன், தொழிலதிபர் கும்பலங்காடு முனிகிருஷ்ணன், சஜீவ் வர்கீஸ், சேகர்ரெட்டி, அரிமா சங்க நிர்வாகிகள் செல்வம், ஜோசப் , கைரளி யோகா மைய நிறுவனர் ராதாகிருஷ்ணன், பாரத் ஆக்சிஜன் நிறுவன அதிகாரி பெபின் கிளமெண்ட் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பயனாளியின் குடும்பத்தினருக்கு வீட்டினை தொழிலதிபர் ஜெ.கிளமெண்ட் ஒப்படைத்த நிலையில், நிகழ்வில் பங்கேற்றவர்கள் சார்பில் மேற்கண்ட குடும்பத்தினருக்கு வீட்டு உபயோக பொருட்கள், உதவி தொகை வழங்கப்பட்டது. மேலும் அந்த குடும்பத்தை சேர்ந்த பள்ளி மாணவி சித்ராவிற்கு நோட்டு புத்தகங்கள், கல்வி உதவித் தொகை ஆகியவை வழங்கப்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
அரசு உயர்நிலைப் பள்ளியில், தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி!பொதுமக்கள் செய்திகள்

அரசு உயர்நிலைப் பள்ளியில், தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி!

HR Kj🕒 அக். 13
குறைதீர் கூட்டத்தில் திருநங்கைகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கல்பொதுமக்கள் செய்திகள்

குறைதீர் கூட்டத்தில் திருநங்கைகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கல்

HR Kj🕒 அக். 13
பாசனத்திற்கு தண்ணீர் கோரி என்.எல்.சி அதிகாரிகளிடம் விவசாயிகள் மனுபொதுமக்கள் செய்திகள்

பாசனத்திற்கு தண்ணீர் கோரி என்.எல்.சி அதிகாரிகளிடம் விவசாயிகள் மனு

HR Kj🕒 அக். 13
கொலை முயற்சி வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட காவலருக்குப் பாராட்டு!பொதுமக்கள் செய்திகள்

கொலை முயற்சி வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட காவலருக்குப் பாராட்டு!

kandhasamy🕒 அக். 13
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!செய்திகள்

யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!

S. Ravichandran🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔