விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில், நெக்சுரா ஹோம்ஸ் மற்றும் எஸ்டேட்ஸ் குழும உரிமையாளரும் சமூக ஆர்வலருமான பால விக்னேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை உமா மகேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார்.
விழாவின் ஒரு பகுதியாக, தோராயமாக ரூ.95,000 மதிப்பிலான சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஆகியவற்றை பள்ளியின் பயன்பாட்டிற்காக சமூக ஆர்வலர் பால விக்னேஷ் இலவசமாக வழங்கினார். மேலும், மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது.
மாணவ-மாணவிகளிடையே தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் அதிகரிக்கும் வகையில் பால விக்னேஷ் ஊக்கமூட்டும் சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாணவர்களுக்கு நேரில் இனிப்புகளை வழங்கியதுடன், தேர்வுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு அவர்களின் கல்வித் திறனை மேலும் மேம்படுத்தும் விதமாகப் பரிசுப் பொருட்களையும் வழங்கினார்.









