திருவாரூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் சம்பா பயிர்கள் செழிப்படைய வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதற்கேற்ப, திருவாரூர் மாவட்டம் முழுவதும் காலை முதலே கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக கங்களாஞ்சேரி, வண்டாம்பாளை, சேந்தமங்கலம், ஆண்டிப்பந்தல், சன்னாநல்லூர் மற்றும் நன்னிலம் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த மழை தீவிரமாக பதிவாகியுள்ளது. தற்போது சம்பா நெல் சாகுபடிப் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் சூழலில், போதிய நீரின்றி பயிர்கள் காய்ந்து வந்தனர். இந்தச் இக்கட்டான கட்டத்தில் பெய்துள்ள இந்த திடீர் மழை, நெல் பயிர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று விவசாயிகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
மறுபுறம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாலையோரங்களில் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள், இந்த எதிர்பாராத மழையால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.









