விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஹேமாவதி மாயமாகி 36 நாட்கள் கடந்துள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி (CBCID) போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
காணாமல் போன சிறுமியின் பெற்றோர்களான வடிவேலு மற்றும் பவானி ஆகியோரின் செல்போன் தரவுகள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனை விவரங்களை அதிகாரிகள் ஆய்வுக்காகக் கைப்பற்றியுள்ளனர். டிஜிட்டல் தடயங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் அடிப்படையில் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, இன்று அப்பகுதியில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் சிபிசிஐடி அதிகாரிகள் நேரில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி கடத்தப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.









