ராமநாதபுரம் மாவட்ட பாஜக முன்னாள் தலைவராகப் பணியாற்றிய தரணி முருகேசன், இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பான குளறுபடிகள் குறித்துப் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை குறிப்பிட்டு சில கருத்துகளைத் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, நயினார் நாகேந்திரனின் உதவியாளர் வானமாமலை என்பவர் அலைபேசியில் தொடர்புகொண்டு த தன்னைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், வீட்டிற்கு வந்து கால் உடைப்பதாகக் கூறி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தரணி முருகேசன் குற்றம்சாட்டியுள்ளார். அரசியல் கருத்தைப் பதிவு செய்ததற்காக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக எழுந்துள்ள இந்தக் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகார் தொடர்பாகக் காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி, உண்மை நிலையை வெளிக்கொண்டு வந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
செய்திகள்
தீபம் விவகார முகநூல் பதிவு: பாஜக முன்னாள் தலைவருக்கு கொலை மிரட்டல்!
🕒 25 நவ., 2026, 04:14 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨
AI Highlights
- •திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் குறித்து முகநூலில் பதிவிட்ட பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் தரணி முருகேசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக ராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








