Settings

முகப்பு/செய்திகள்/நலத்திட்ட உதவிகளுடன் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளைக் கொண்டாட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு திட்டம்!
செய்திகள்

நலத்திட்ட உதவிகளுடன் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளைக் கொண்டாட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு திட்டம்!

🕒 25 நவ., 2026, 10:38 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நலத்திட்ட உதவிகளுடன் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளைக் கொண்டாட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு திட்டம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதிதிராவிடர் மக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கத் திருச்சியில் நடைபெற்ற திமுக ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆதிதிராவிடர் மக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கத் திருச்சியில் நடைபெற்ற திமுக ஆதிதிராவிடர் நலக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், ஆதிதிராவிடர் நலக்குழு மாநில நிர்வாகிகள் மற்றும் திருச்சி மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (நவம்பர் 25) நடைபெற்றது. மாநில செயலாளர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நலக்குழு தலைவர் மருதூர் ராமலிங்கம், துணைச் செயலாளர் துரைசாமி, இணைச் செயலாளர் வி.பி. ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வருகின்ற நவம்பர் 27-ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் அனைத்து மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி மற்றும் வார்டுகளில் கழக இருவண்ணக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடவும், ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் டெல்டா மாவட்டங்களில் நிலவும் வறட்சியைச் சமாளிக்க விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க திமுக தலைவர் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது. வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் ஆதிதிராவிடர் நலக்குழு நிர்வாகிகள் ஒருங்கிணைந்து பணியாற்றி, கழகம் அறிவிக்கும் வேட்பாளர்களின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மழைநீருடன் கலந்த கழிவுநீர்... ஆறுபோல் ஓடிய நீரால் ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் அதிர்ச்சி!செய்திகள்

மழைநீருடன் கலந்த கழிவுநீர்... ஆறுபோல் ஓடிய நீரால் ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் அதிர்ச்சி!

Ramkumarsamy🕒 நவ. 25
அதிக லாபம் தருகிறோம் என்று ஆசை வார்த்தை; திருச்சியில் நடந்த பகீர் ஆன்லைன் மோசடி!செய்திகள்

அதிக லாபம் தருகிறோம் என்று ஆசை வார்த்தை; திருச்சியில் நடந்த பகீர் ஆன்லைன் மோசடி!

MSD🕒 நவ. 25
கல்லூரிக்குள் புகுந்து மாணவன் மீது கட்டையால் தாக்குதல்: திருவாரூரில் பரபரப்பு!செய்திகள்

கல்லூரிக்குள் புகுந்து மாணவன் மீது கட்டையால் தாக்குதல்: திருவாரூரில் பரபரப்பு!

NESARAJAN🕒 நவ. 25
650 பேருக்கு வேலை! மணப்பாறையில் ரூ.868 கோடியில் பெப்சிகோ பிரம்மாண்ட ஆலை!நகரங்கள்

650 பேருக்கு வேலை! மணப்பாறையில் ரூ.868 கோடியில் பெப்சிகோ பிரம்மாண்ட ஆலை!

Ramachandran🕒 நவ. 25
அரசு ITI பட்டமளிப்பு விழா: சான்றிதழ் பெற்று உற்சாகமடைந்த மாணவர்கள்!நகரங்கள்

அரசு ITI பட்டமளிப்பு விழா: சான்றிதழ் பெற்று உற்சாகமடைந்த மாணவர்கள்!

Ramachandran🕒 நவ. 25
ஒன்றிய அரசை கண்டித்து விருதுநகரில் கொதித்தெழுந்த ஓய்வூதியர்கள்! முழு விவரம் இதோநகரங்கள்

ஒன்றிய அரசை கண்டித்து விருதுநகரில் கொதித்தெழுந்த ஓய்வூதியர்கள்! முழு விவரம் இதோ

Ramkumarsamy🕒 நவ. 25
ராசிபுரத்தை மீண்டும் அதிமுகவின் கோட்டையாக்குவோம்: கே.பி.பி. பாஸ்கர் உறுதிஅரசியல்

ராசிபுரத்தை மீண்டும் அதிமுகவின் கோட்டையாக்குவோம்: கே.பி.பி. பாஸ்கர் உறுதி

SRIDHAR🕒 நவ. 25
அதிர்ச்சியில் நகைக்கடன் தாரர்கள்! ஓர வைப்புத் தொகை செலுத்த வங்கிகள் அதிரடி உத்தரவு!வணிகம்

அதிர்ச்சியில் நகைக்கடன் தாரர்கள்! ஓர வைப்புத் தொகை செலுத்த வங்கிகள் அதிரடி உத்தரவு!

JOWIN AKASH🕒 நவ. 25
TNO வாட்ஸ்அப் சானல் ➔