Settings

முகப்பு/செய்திகள்/சாதித்த அரசு அலுவலர்கள்! முதலமைச்சர் கோப்பை கைப்பந்து போட்டியில் தூத்துக்குடி அணிக்கு வெண்கலப் பதக்கம்!
செய்திகள்

சாதித்த அரசு அலுவலர்கள்! முதலமைச்சர் கோப்பை கைப்பந்து போட்டியில் தூத்துக்குடி அணிக்கு வெண்கலப் பதக்கம்!

🕒 25 நவ., 2026, 10:43 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சாதித்த அரசு அலுவலர்கள்! முதலமைச்சர் கோப்பை கைப்பந்து போட்டியில் தூத்துக்குடி அணிக்கு வெண்கலப் பதக்கம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •2026-27 முதலமைச்சர் கோப்பை கைப்பந்து போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தூத்துக்குடி அரசு அலுவலர்கள் அணி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜனை சந்தித்து வாழ்த்துப் பெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

2026-2027ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை அரசுப் பணியாளர்கள் பிரிவில் நடைபெற்ற கைப்பந்துப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அரசு அலுவலர்கள் அணி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜனை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டிகளில், அரசுத் துறைகளைச் சேர்ந்த பல்வேறு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். இதில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகப் பங்கேற்ற கைப்பந்து அணி சிறப்பாகச் செயல்பட்டு மூன்றாம் இடத்தைப் பிடித்தது. இந்த அணியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மி. பிரபு, கோவில்பட்டி வருவாய் வட்டாட்சியர் அறிவழகன் என்ற சிவராஜ், முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் ஆனந்த், சரவணன் வேல்ராஜ், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார், காவல்துறை சார்பில் இளங்கோ, சுகாதார ஆய்வாளர்கள் கௌஷிக், சிவராம் சுப்பிரமணியன், முனியராஜ் மற்றும் காமராஜ் ஆகியோர் இடம்பெற்று வெண்கலப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழ்களையும் பெற்றனர்.

போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்களுடன் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்த வீரர்களை ஆட்சியர் விஷு மகாஜன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் மூ. குருச்சந்திரன், தூத்துக்குடி சார் ஆட்சியர் விவேக் யாதவ், சார் ஆட்சியர் ஹிமான்ஷு மங்கள், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கௌதம் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மழைநீருடன் கலந்த கழிவுநீர்... ஆறுபோல் ஓடிய நீரால் ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் அதிர்ச்சி!செய்திகள்

மழைநீருடன் கலந்த கழிவுநீர்... ஆறுபோல் ஓடிய நீரால் ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் அதிர்ச்சி!

Ramkumarsamy🕒 நவ. 25
அதிக லாபம் தருகிறோம் என்று ஆசை வார்த்தை; திருச்சியில் நடந்த பகீர் ஆன்லைன் மோசடி!செய்திகள்

அதிக லாபம் தருகிறோம் என்று ஆசை வார்த்தை; திருச்சியில் நடந்த பகீர் ஆன்லைன் மோசடி!

MSD🕒 நவ. 25
கல்லூரிக்குள் புகுந்து மாணவன் மீது கட்டையால் தாக்குதல்: திருவாரூரில் பரபரப்பு!செய்திகள்

கல்லூரிக்குள் புகுந்து மாணவன் மீது கட்டையால் தாக்குதல்: திருவாரூரில் பரபரப்பு!

NESARAJAN🕒 நவ. 25
650 பேருக்கு வேலை! மணப்பாறையில் ரூ.868 கோடியில் பெப்சிகோ பிரம்மாண்ட ஆலை!நகரங்கள்

650 பேருக்கு வேலை! மணப்பாறையில் ரூ.868 கோடியில் பெப்சிகோ பிரம்மாண்ட ஆலை!

Ramachandran🕒 நவ. 25
அரசு ITI பட்டமளிப்பு விழா: சான்றிதழ் பெற்று உற்சாகமடைந்த மாணவர்கள்!நகரங்கள்

அரசு ITI பட்டமளிப்பு விழா: சான்றிதழ் பெற்று உற்சாகமடைந்த மாணவர்கள்!

Ramachandran🕒 நவ. 25
ஒன்றிய அரசை கண்டித்து விருதுநகரில் கொதித்தெழுந்த ஓய்வூதியர்கள்! முழு விவரம் இதோநகரங்கள்

ஒன்றிய அரசை கண்டித்து விருதுநகரில் கொதித்தெழுந்த ஓய்வூதியர்கள்! முழு விவரம் இதோ

Ramkumarsamy🕒 நவ. 25
ராசிபுரத்தை மீண்டும் அதிமுகவின் கோட்டையாக்குவோம்: கே.பி.பி. பாஸ்கர் உறுதிஅரசியல்

ராசிபுரத்தை மீண்டும் அதிமுகவின் கோட்டையாக்குவோம்: கே.பி.பி. பாஸ்கர் உறுதி

SRIDHAR🕒 நவ. 25
அதிர்ச்சியில் நகைக்கடன் தாரர்கள்! ஓர வைப்புத் தொகை செலுத்த வங்கிகள் அதிரடி உத்தரவு!வணிகம்

அதிர்ச்சியில் நகைக்கடன் தாரர்கள்! ஓர வைப்புத் தொகை செலுத்த வங்கிகள் அதிரடி உத்தரவு!

JOWIN AKASH🕒 நவ. 25
TNO வாட்ஸ்அப் சானல் ➔