Settings

முகப்பு/செய்திகள்/கல்லூரிக்குள் புகுந்து மாணவன் மீது கட்டையால் தாக்குதல்: திருவாரூரில் பரபரப்பு!
செய்திகள்

கல்லூரிக்குள் புகுந்து மாணவன் மீது கட்டையால் தாக்குதல்: திருவாரூரில் பரபரப்பு!

🕒 25 நவ., 2026, 10:41 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கல்லூரிக்குள் புகுந்து மாணவன் மீது கட்டையால் தாக்குதல்: திருவாரூரில் பரபரப்பு! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரியில் மாணவர் ஸ்ரீதர் மீது தாக்குதல் நடத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவாரூர் தியாகராஜ கலைக் கல்லூரியில் (T.K.G.A.C) மாணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கல்லூரியில் மாணவர்களிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த மோதல் வெடித்துள்ளது. திருவாரூர் தர்ம கோயில் தெருவைச் சேர்ந்த ஸ்ரீதர் (22), இக்கல்லூரியில் பி.ஏ பொருளாதாரம் (எக்கனாமிக்ஸ்) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சக மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட சிறு தகராறு காரணமாக, மணிகண்டன் என்ற மாணவருக்கும் ஸ்ரீதருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கல்லூரி வளாகத்தில் ஸ்ரீதர் நின்றுகொண்டிருந்தபோது, திருவாரூர் மஜீத் நகரைச் சேர்ந்த அஷ்ரப் அலி (22), அழகிரி காலனியைச் சேர்ந்த மாதேஷ் (21) உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட கும்பல் திடீரென அங்கு வந்துள்ளது. கட்டையால் சரமாரியாகத் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த ஸ்ரீதரனை சக மாணவர்கள் மீட்டு, உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவர் ஸ்ரீதர் அளித்த புகாரின் அடிப்படையில், திருவாரூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையின் பேரில் அஷ்ரப் அலி மற்றும் மாதேஷ் ஆகிய இருவரைக் கைது செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள மற்றொரு நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவம் திருவாரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மழைநீருடன் கலந்த கழிவுநீர்... ஆறுபோல் ஓடிய நீரால் ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் அதிர்ச்சி!செய்திகள்

மழைநீருடன் கலந்த கழிவுநீர்... ஆறுபோல் ஓடிய நீரால் ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் அதிர்ச்சி!

Ramkumarsamy🕒 நவ. 25
கருகும் பயிர்கள் ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் கோரி திருவாரூரில் விவசாயிகள் தீவிர ஆர்ப்பாட்டம்!செய்திகள்

கருகும் பயிர்கள் ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் கோரி திருவாரூரில் விவசாயிகள் தீவிர ஆர்ப்பாட்டம்!

NESARAJAN🕒 நவ. 25
அதிக லாபம் தருகிறோம் என்று ஆசை வார்த்தை; திருச்சியில் நடந்த பகீர் ஆன்லைன் மோசடி!செய்திகள்

அதிக லாபம் தருகிறோம் என்று ஆசை வார்த்தை; திருச்சியில் நடந்த பகீர் ஆன்லைன் மோசடி!

MSD🕒 நவ. 25
650 பேருக்கு வேலை! மணப்பாறையில் ரூ.868 கோடியில் பெப்சிகோ பிரம்மாண்ட ஆலை!நகரங்கள்

650 பேருக்கு வேலை! மணப்பாறையில் ரூ.868 கோடியில் பெப்சிகோ பிரம்மாண்ட ஆலை!

Ramachandran🕒 நவ. 25
அரசு ITI பட்டமளிப்பு விழா: சான்றிதழ் பெற்று உற்சாகமடைந்த மாணவர்கள்!நகரங்கள்

அரசு ITI பட்டமளிப்பு விழா: சான்றிதழ் பெற்று உற்சாகமடைந்த மாணவர்கள்!

Ramachandran🕒 நவ. 25
ஒன்றிய அரசை கண்டித்து விருதுநகரில் கொதித்தெழுந்த ஓய்வூதியர்கள்! முழு விவரம் இதோநகரங்கள்

ஒன்றிய அரசை கண்டித்து விருதுநகரில் கொதித்தெழுந்த ஓய்வூதியர்கள்! முழு விவரம் இதோ

Ramkumarsamy🕒 நவ. 25
ராசிபுரத்தை மீண்டும் அதிமுகவின் கோட்டையாக்குவோம்: கே.பி.பி. பாஸ்கர் உறுதிஅரசியல்

ராசிபுரத்தை மீண்டும் அதிமுகவின் கோட்டையாக்குவோம்: கே.பி.பி. பாஸ்கர் உறுதி

SRIDHAR🕒 நவ. 25
அதிர்ச்சியில் நகைக்கடன் தாரர்கள்! ஓர வைப்புத் தொகை செலுத்த வங்கிகள் அதிரடி உத்தரவு!வணிகம்

அதிர்ச்சியில் நகைக்கடன் தாரர்கள்! ஓர வைப்புத் தொகை செலுத்த வங்கிகள் அதிரடி உத்தரவு!

JOWIN AKASH🕒 நவ. 25
TNO வாட்ஸ்அப் சானல் ➔