Settings

முகப்பு/செய்திகள்/தி.மு.க-வை கடுமையாக விமர்சித்த மாணிக்கம் தாகூர்! வைரலாகும் பேச்சு
செய்திகள்

தி.மு.க-வை கடுமையாக விமர்சித்த மாணிக்கம் தாகூர்! வைரலாகும் பேச்சு

🕒 25 நவ., 2026, 11:26 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
தி.மு.க-வை கடுமையாக விமர்சித்த மாணிக்கம் தாகூர்! வைரலாகும் பேச்சு - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •தி.மு.க இன்னும் ஆட்சியில் இருப்பதாக நினைத்துச் செயல்படுவது நகைச்சுவையாக உள்ளது என விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தி.மு.க ஆட்சியில் இல்லை என்பதை உணராமல், இன்னும் ஆட்சியில் இருப்பதாகவே நினைத்துச் செயல்படுவது நகைச்சுவையாக உள்ளது" என விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

விருதுநகர் ரயில்வே நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது: மக்களால் தோற்கடிக்கப்பட்ட பிறகும் தி.மு.க இன்னும் ஆட்சியில் இருப்பதாகவே நினைத்துக் கொண்டு செயல்படுகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி அரசு, டெல்டா பகுதிகளை ஆய்வு செய்ய 19 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்தச் சூழலில், தி.மு.க-வும் தனியாகக் குழு அனுப்பப் போவதாகக் கூறுவது நகைச்சுவையாக உள்ளது. திருப்பரங்குன்றத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியே அறங்காவலர் குழு 6 மணி நேரம் ஆலோசித்து, ஆகம விதிகள் மற்றும் வழக்கப்படி தீபம் ஏற்றியுள்ளது. பா.ஜ.க-வினர் காட்டுவது பிரிட்டிஷ் காலத்து அளவைக் கல்; உண்மையான தீபத்தூண் தனியாக உள்ளது. தீபத்தைத் தடுக்க முயன்றவர்களுக்குச் சரியான பதிலடி கொடுத்த முதலமைச்சர் விஜய்க்குப் பாராட்டுகள். மேலும், 'முரசொலி' நாளிதழில் திருப்பரங்குன்றம் தீபம் குறித்து ஒரு வார்த்தை கூட இடம்பெறாதது, பா.ஜ.க-வுடன் உறவு வைக்க தி.மு.க தயாராகி வருவதையே காட்டுகிறது.

தாம் சொன்னதைக் கேட்டு மக்கள் தங்கம் வாங்குவதைக் குறைத்ததால்தான் விலை குறைந்தது எனப் பிரதமர் மோடி கூறினார். தற்போது மீண்டும் தங்க விலை உயர்ந்துள்ளது; இப்போது மக்கள் அவர் சொல்வதைக் கேட்காமல் போய்விட்டார்களா? அமெரிக்காவின் வட்டி விகிதத்தைச் சார்ந்தே தங்க விலை உள்ளது. புரிதலின்றி பொய்ப் பிரச்சாரங்களை மோடி நிறுத்த வேண்டும். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் 3 நிர்வாக அதிகாரிகள் விசாரிக்கப்பட்டு, திருப்பூர் பெண் எஸ்.பி. தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 'பழனிசாமி' என்ற பெயரைக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, கோயில் மற்றும் வழிபாடு விவகாரங்களில் தி.மு.க பேசும் அரசியலைப் பேச வேண்டாம்.

கடந்த தி.மு.க ஆட்சியில் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஊழலைக் குறைத்து நிதி நிலையைச் சீரமைத்து, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றும். மேலும், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெரிய தொழிற்சாலைகளைக் கொண்டு வர அரசு தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
அதிக லாபம் தருகிறோம் என்று ஆசை வார்த்தை; திருச்சியில் நடந்த பகீர் ஆன்லைன் மோசடி!செய்திகள்

அதிக லாபம் தருகிறோம் என்று ஆசை வார்த்தை; திருச்சியில் நடந்த பகீர் ஆன்லைன் மோசடி!

MSD🕒 நவ. 25
கல்லூரிக்குள் புகுந்து மாணவன் மீது கட்டையால் தாக்குதல்: திருவாரூரில் பரபரப்பு!செய்திகள்

கல்லூரிக்குள் புகுந்து மாணவன் மீது கட்டையால் தாக்குதல்: திருவாரூரில் பரபரப்பு!

NESARAJAN🕒 நவ. 25
650 பேருக்கு வேலை! மணப்பாறையில் ரூ.868 கோடியில் பெப்சிகோ பிரம்மாண்ட ஆலை!நகரங்கள்

650 பேருக்கு வேலை! மணப்பாறையில் ரூ.868 கோடியில் பெப்சிகோ பிரம்மாண்ட ஆலை!

Ramachandran🕒 நவ. 25
அரசு ITI பட்டமளிப்பு விழா: சான்றிதழ் பெற்று உற்சாகமடைந்த மாணவர்கள்!நகரங்கள்

அரசு ITI பட்டமளிப்பு விழா: சான்றிதழ் பெற்று உற்சாகமடைந்த மாணவர்கள்!

Ramachandran🕒 நவ. 25
ஒன்றிய அரசை கண்டித்து விருதுநகரில் கொதித்தெழுந்த ஓய்வூதியர்கள்! முழு விவரம் இதோநகரங்கள்

ஒன்றிய அரசை கண்டித்து விருதுநகரில் கொதித்தெழுந்த ஓய்வூதியர்கள்! முழு விவரம் இதோ

Ramkumarsamy🕒 நவ. 25
ராசிபுரத்தை மீண்டும் அதிமுகவின் கோட்டையாக்குவோம்: கே.பி.பி. பாஸ்கர் உறுதிஅரசியல்

ராசிபுரத்தை மீண்டும் அதிமுகவின் கோட்டையாக்குவோம்: கே.பி.பி. பாஸ்கர் உறுதி

SRIDHAR🕒 நவ. 25
அதிர்ச்சியில் நகைக்கடன் தாரர்கள்! ஓர வைப்புத் தொகை செலுத்த வங்கிகள் அதிரடி உத்தரவு!வணிகம்

அதிர்ச்சியில் நகைக்கடன் தாரர்கள்! ஓர வைப்புத் தொகை செலுத்த வங்கிகள் அதிரடி உத்தரவு!

JOWIN AKASH🕒 நவ. 25
மாவட்ட ஆட்சியர் கைகளால் பாராட்டு பெற்ற பிரஸ் கிளப் நிர்வாகியின் மகள்!நகரங்கள்

மாவட்ட ஆட்சியர் கைகளால் பாராட்டு பெற்ற பிரஸ் கிளப் நிர்வாகியின் மகள்!

JOWIN AKASH🕒 நவ. 25
TNO வாட்ஸ்அப் சானல் ➔