நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கச்சேரி சாலையில் அமைந்துள்ள 'ராசி ஏஜென்சிஸ்' என்ற கடையின் முன்பு வைக்கப்பட்டிருந்த பார்சலை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. ராசிபுரம் கச்சேரி சாலையில் இயங்கி வரும் ராசி ஏஜென்சிஸ் கடையின் முன்பகுதியில் வாடிக்கையாளர்களுக்காகக் கொண்டுவரப்பட்ட பார்சல் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அங்கு திடீரென வந்த நபர் ஒருவர், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு யாரும் கவனிக்காத நேரத்தில் அந்தப் பார்சலை நைசாகத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாகக் கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) பதிவுகளைக் ஆய்வு செய்தபோது, மர்ம நபர் பார்சலைத் திருடிச் செல்லும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள்
கடையின் முன்பு வைக்கப்பட்டிருந்த பார்சல் திருட்டு: சிசிடிவி காட்சிகள் வைரல்!
🕒 25 நவ., 2026, 10:40 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
✨
AI Highlights
- •நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கடையின் முன்பு வைக்கப்பட்டிருந்த பார்சலை மர்ம நபர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








