ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்குட்பட்ட திருவிக பள்ளி காளியம்மன் கோவில் சாலை மற்றும் மதுரை ரோடு மாரியம்மன் கோவில் அருகே உள்ள வாருகால்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் ஆறுபோல் ஓடியது. இதனால் அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பெரும் சிரமத்தைச் சந்தித்தனர்.
முறையாகத் தூர்வாரப்படாத வாருகால்களால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு, நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகக் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு வாருகால்களைச் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.









