வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தாழை சிலம்பு பயிற்சிப் பள்ளி மாணவ-மாணவர்களுடன் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் சிந்து அழகப்பன் உற்சாகமாகக் கொண்டாடினார்.
குடியாத்தத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் சிந்து அழகப்பன் கேக் வெட்டி குழந்தைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, தாழை சிலம்பு பயிற்சிப் பள்ளி மாணவர்களின் பாரம்பரிய சிலம்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்களின் திறமைகளைப் பாராட்டிய சட்டமன்ற உறுப்பினர், அவர்களுக்கு கல்வி உபகரணங்களை பரிசாக வழங்கினார்.









