மதுரை மாநகராட்சி சார்பில், பிரதமரின் சாலையோர வியாபாரிகள் ஆத்மநிர்பர் நிதி (PM SVANidhi) திட்டத்தின் கீழ், தங்களுக்கு வழங்கப்பட்ட கடனை முறையாகத் திருப்பிச் செலுத்திய வியாபாரிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில், சாலையோர வியாபாரிகளின் குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியரில் கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டு, ஊக்கத்தொகைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி பொறுப்பு மேயர் நாகராஜன் மற்றும் மாநகராட்சி உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு பயனாளிகளைச் சிறப்பித்தனர்.









