Settings

முகப்பு/செய்திகள்/காசோலை மோசடி வழக்கில் மகிளா காங்கிரஸ் நிர்வாகிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை!
செய்திகள்

காசோலை மோசடி வழக்கில் மகிளா காங்கிரஸ் நிர்வாகிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை!

🕒 12 நவ., 2026, 04:08 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
காசோலை மோசடி வழக்கில் மகிளா காங்கிரஸ் நிர்வாகிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •காசோலை மோசடி வழக்கில் மகிளா காங்கிரஸ் நிர்வாகிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் இடைக்குடி தெருவைச் சேர்ந்த சங்கரநாராயணன் மகன் சண்முகசுந்தரம். இவர் நகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகியாகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவரிடம், சாத்தான்குளம் அருகே கொழுந்தட்டு வடக்குத் தெருவைச் சேர்ந்த இருதயராஜ் என்பவரது மனைவியும், வட்டார மகிளா காங்கிரஸ் நிர்வாகியுமான வசுமதி, கடந்த 25.09.2021 அன்று தனது குடும்ப அவசரத் தேவைக்காக ரூ. 2 லட்சம் கடனாகப் பெற்றுள்ளார். அப்பணத்தை ஒரு மாதத்தில் திருப்பித் தருவதாகக் கூறி, 02.11.2021 தேதியிட்ட வங்கிக் காசோலையை வசுமதி வழங்கியுள்ளார்.

ஆனால், குறிப்பிட்ட தேதியில் சண்முகசுந்தரம் அந்தக் காசோலையை வங்கியில் செலுத்தியபோது, வசுமதியின் வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாமல் காசோலை திரும்பியது.

இது தொடர்பாக வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பியும் பணத்தைத் திருப்பித் தர நடவடிக்கை எடுக்காததால், சண்முகசுந்தரம் சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிபதி தேவி ரக்ஷா, வசுமதி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். மேலும், கடன் தொகையான ரூ. 2 லட்சத்தை 2 மாதங்களுக்குள் சண்முகசுந்தரத்திடம் வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு வழங்கத் தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!செய்திகள்

தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!

Rajan🕒 நவ. 22
தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!செய்திகள்

தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!

Rajan🕒 நவ. 22
வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!செய்திகள்

வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

S. Ravichandran🕒 நவ. 22
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்விஅரசியல்

மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!செய்திகள்

யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!

S. Ravichandran🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔