திண்டுக்கல் அருகே உள்ள அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு முறையான மற்றும் நிரந்தர மயான பாதை வசதி செய்து தரக் கோரி நத்தம் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறுதி ஊர்வலங்களை எடுத்துச் செல்வதில் தாங்கள் பல ஆண்டுகளாக எதிர்கொள்ளும் கடும் சிரமங்களை சுட்டிக்காட்டிய அவர்கள், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்த திடீர் சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், இருபுறமும் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.









