திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு இயக்கம் (MCP) சார்பில், அரசியலமைப்பு நாள் விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று (நவம்பர் 26) சிறப்பாக நடைபெற்றது.
ஆம்பூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான மனோ தங்கராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியத்துவத்தையும், அதன் விழுமியங்களையும் பொதுமக்களிடையே கொண்டு செல்லும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இயக்கத்தின் நிர்வாகிகள், பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.









