திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலை முன்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நவம்பர் 26 அரசியல் சாசனம் மற்றும் வாக்குரிமை பாதுகாப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தொகுதி மாவட்ட செயலாளர் மேத்தா ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணைச்செயலாளர் ஆ. தசரதன் உட்பட பல கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டு அரசியல் சாசன சட்டத்தின் மாண்பைப் பாதுகாக்கவும், வாக்குரிமையின் அவசியத்தை வலியுறுத்தவும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.









