திருச்சி மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் வின்சென்ட் அறிவுறுத்தலின்பேரில், காவல் ஆய்வாளா் அரங்கநாதன் தலைமையிலான போலீஸாா் திருவெறும்பூா் கணேசா ரவுண்டானா பகுதியில் நேற்று (அக்.4) வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினிவேனை சோதனை செய்த போது, அதில் சட்டவிரோதமாக 1050 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து ரேஷன் அரிசியை கடத்திவந்த திருவெறும்பூா் வடக்கு காட்டூரை சோ்ந்த சிவகுமாா் (52) என்பவரை போலீஸாா் கைது செய்து, 1,050 கிலோ ரேஷன் அரிசியையும், அந்த வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
செய்திகள்
ரேஷன் அரிசி கடத்தியவர் கைது - 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!
🕒 5 நவ., 2026, 03:16 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
✨
AI Highlights
- •திருச்சி அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது - 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








