Settings

முகப்பு/செய்திகள்/சம்பா பயிர்கள் கருகும் அபாயம்: மழை வேண்டி பெண் விவசாயிகள் சேற்றில் கொடும்பாவி உருவம் செய்து நூதன வழிபாடு!
செய்திகள்

சம்பா பயிர்கள் கருகும் அபாயம்: மழை வேண்டி பெண் விவசாயிகள் சேற்றில் கொடும்பாவி உருவம் செய்து நூதன வழிபாடு!

🕒 26 நவ., 2026, 12:26 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சம்பா பயிர்கள் கருகும் அபாயம்: மழை வேண்டி பெண் விவசாயிகள் சேற்றில் கொடும்பாவி உருவம் செய்து நூதன வழிபாடு! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் மேட்டூர் நீர் நிறுத்தப்பட்டதால் கருகும் சம்பா பயிர்களைக் காப்பாற்ற, பெண் விவசாயிகள் சேற்றில் கொடும்பாவி உருவம் செய்து நூதன முறையில் மழை வேண்டி வழிபாடு நடத்தினர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வட்டாரத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில், மேட்டூர் அணையின் நீர் நிறுத்தப்பட்டதால் சம்பா பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைக் காப்பாற்றக் கோரி பெண் விவசாயிகள் சேற்றில் ‘ஐயோ கொடும்பாவி’ உருவம் செய்து நூதன முறையில் மழை வேண்டி வழிபாட்டில் ஈடுபட்டனர்.

கொரடாச்சேரி வட்டத்திற்கு உட்பட்ட திருமதிகுன்னம், பருத்தியூர், கண்கொடுத்தவனிதம், தாழைக்குடி, மேலராதநல்லூர், நீலனூர், சத்தியவாடி, செட்டிசிமிழி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர். இதற்கிடையே, மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் போதிய நாட்களுக்குக் கிடைக்காததால், பாசன வாய்க்கால்கள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் வயல்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் தண்ணீர் இன்றி கருகத் தொடங்கியுள்ளன.

ஏராளமான தொகையைச் செலவு செய்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பயிர்களைக் காப்பாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். நிலத்தடி நீரைப் பயன்படுத்தியும் பயிர்களை முழுமையாகப் பாதுகாக்க முடியாத சூழல் நிலவுவதால், மழையை எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மழை வேண்டியும், கருகும் பயிர்களைக் காப்பாற்ற வேண்டியும் திருமதிகுன்னம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகள் ஒன்றிணைந்து சாலையில் சேற்றால் ‘ஐயோ கொடும்பாவி’ உருவம் செய்து, அதனைச் சுற்றி கும்மியடித்து பாரம்பரியப் பாடல்களைப் பாடி வழிபாடு நடத்தினர். இதுகுறித்து அப்பகுதி பெண் விவசாயி ராணி கூறுகையில், “எங்கு பார்த்தாலும் மழை இல்லாததால் பயிர்கள் காய்ந்து வருகின்றன. அரசு எங்களுக்கு உரிய உதவிகளைச் செய்ய வேண்டும்” என்றார். மற்றொரு பெண் விவசாயி கலா கூறுகையில், “மழை பெய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த வழிபாட்டை நடத்தி வருகிறோம். விவசாயம் நன்றாக இருந்தால்தான் மக்களும் நன்றாக வாழ முடியும்” எனத் தெரிவித்தார். பாரம்பரிய நம்பிக்கையின் அடிப்படையில் பெண் விவசாயிகள் மேற்கொண்டுள்ள இந்த நூதன வழிபாடு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
பாதுகாப்பு பணியின் போது காவலர் மர்ம மரணம்: திருவண்ணாமலையில் சோகம்செய்திகள்

பாதுகாப்பு பணியின் போது காவலர் மர்ம மரணம்: திருவண்ணாமலையில் சோகம்

Manimaran🕒 நவ. 26
தீபத் திருவிழா பாதுகாப்புப் பணி முடிந்து திரும்பியபோது சோகம்: கழிவறையில் காவலர் சடலம்!செய்திகள்

தீபத் திருவிழா பாதுகாப்புப் பணி முடிந்து திரும்பியபோது சோகம்: கழிவறையில் காவலர் சடலம்!

Manimaran🕒 நவ. 26
சாக்லேட் வடிவில் போதைப்பொருள்! திருச்சி ரயில் நிலையத்தில் அதிரடி பறிமுதல்!செய்திகள்

சாக்லேட் வடிவில் போதைப்பொருள்! திருச்சி ரயில் நிலையத்தில் அதிரடி பறிமுதல்!

MSD🕒 நவ. 26
சிபிஐ விசாரணை கோரிக்கை: திமுக மீது அமைச்சர் அருண்ராஜ் கடும் விமர்சனம்!அரசியல்

சிபிஐ விசாரணை கோரிக்கை: திமுக மீது அமைச்சர் அருண்ராஜ் கடும் விமர்சனம்!

NESARAJAN🕒 நவ. 26
மின்கசிவால் கேஸ் ஆபீஸ் எரிந்து நாசம்: 2 சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு!நகரங்கள்

மின்கசிவால் கேஸ் ஆபீஸ் எரிந்து நாசம்: 2 சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு!

Srinivasan🕒 நவ. 26
தொழில் முனைவோருக்கு குட் நியூஸ்: ரூ.31.14 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது!தமிழ்நாடு

தொழில் முனைவோருக்கு குட் நியூஸ்: ரூ.31.14 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது!

JOWIN AKASH🕒 நவ. 26
200 ஆண்டு பழமையான நாணயங்கள் மற்றும் தபால் தலைகள்: ஈரோட்டில் அசத்தல் கண்காட்சி!நகரங்கள்

200 ஆண்டு பழமையான நாணயங்கள் மற்றும் தபால் தலைகள்: ஈரோட்டில் அசத்தல் கண்காட்சி!

Dinesh🕒 நவ. 26
ஒன்றிய அரசைக் கண்டித்து நாமக்கல்லில் திரண்ட விவசாயிகள்: ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!தமிழ்நாடு

ஒன்றிய அரசைக் கண்டித்து நாமக்கல்லில் திரண்ட விவசாயிகள்: ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!

SRIDHAR🕒 நவ. 26
TNO வாட்ஸ்அப் சானல் ➔