Settings

முகப்பு/அரசியல்/சிபிஐ விசாரணை கோரிக்கை: திமுக மீது அமைச்சர் அருண்ராஜ் கடும் விமர்சனம்!
அரசியல்

சிபிஐ விசாரணை கோரிக்கை: திமுக மீது அமைச்சர் அருண்ராஜ் கடும் விமர்சனம்!

🕒 26 நவ., 2026, 12:30 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சிபிஐ விசாரணை கோரிக்கை: திமுக மீது அமைச்சர் அருண்ராஜ் கடும் விமர்சனம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், சிபிஐ விசாரணை கோரிய உதயநிதி ஸ்டாலின் விவகாரத்தில் திமுக மீது இரட்டை நிலைப்பாடு இருப்பதாகக் குற்றம்சாட்டினார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டடங்கள் திறப்பு மற்றும் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கலந்துகொண்டு புதிய கட்டடங்களைத் திறந்து வைத்து, பிறந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை அணிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் அருண்ராஜ், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆளுநரைச் சந்தித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி மனு அளித்தது குறித்துக் கேள்வி எழுப்பினார. அப்போது அவர், இது திமுகவின் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுவதாக விமர்சித்தார். ஆட்சியில் இருக்கும்போது ஒரு நிலைப்பாடும், மக்கள் புறக்கணித்த பிறகு மற்றொரு நிலைப்பாடும் எடுப்பதுதான் திமுகவின் வழக்கம். அவர்கள் ஆட்சியில் இருந்தபோது எந்தெந்த வழக்குகளுக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று நீதிமன்றங்கள் உத்தரவிட்டபோது, அதனை திமுக எதிர்த்தது. ஆனால், தற்போது அதற்கு மாறாகப் பேசி வருகின்றனர்" என்று அவர் தெரிவித்தார். மேலும், நேர்மையான முறையில் விசாரணை நடைபெற வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு என்றும், ஆனால் திமுக ஒவ்வொரு விஷயத்திலும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டே வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஆரம்பத்தில் சிபிஐ விசாரணை வேண்டாம் என்று கூறிவிட்டு, தற்போது எதற்காக அதைக் கோருகிறார்கள் என்றும், பாஜகவுடன் எந்தப் புரிதலின் அடிப்படையில் திமுக செயல்படுகிறது என்பதையும் அவர்கள் விளக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தயக்கம் - விஷ்வ ஹிந்து பரிஷத் ஆனந்த் கேள்விஅரசியல்

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தயக்கம் - விஷ்வ ஹிந்து பரிஷத் ஆனந்த் கேள்வி

Ramachandran🕒 நவ. 24
எம்எல்ஏ அருள்விக்னேஷை கைது செய்து பதவி நீக்கம் செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்அரசியல்

எம்எல்ஏ அருள்விக்னேஷை கைது செய்து பதவி நீக்கம் செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

Sugumaran🕒 நவ. 24
திருவண்ணாமலை தீபத் திருவிழா: பக்தர்களுடன் அமர்ந்து அன்னதானம் அருந்திய அமைச்சர்அரசியல்

திருவண்ணாமலை தீபத் திருவிழா: பக்தர்களுடன் அமர்ந்து அன்னதானம் அருந்திய அமைச்சர்

Srinivasan🕒 நவ. 23
உச்ச நீதிமன்றம் சொல்லியும் தீபம் ஏற்ற மறுப்பது ஏன்? கொந்தளிக்கும் நைனார் நாகேந்திரன்!அரசியல்

உச்ச நீதிமன்றம் சொல்லியும் தீபம் ஏற்ற மறுப்பது ஏன்? கொந்தளிக்கும் நைனார் நாகேந்திரன்!

Anandakumar🕒 நவ. 23
சம்பா பயிர்கள் கருகும் அபாயம்: மழை வேண்டி பெண் விவசாயிகள் சேற்றில் கொடும்பாவி உருவம் செய்து நூதன வழிபாடு!செய்திகள்

சம்பா பயிர்கள் கருகும் அபாயம்: மழை வேண்டி பெண் விவசாயிகள் சேற்றில் கொடும்பாவி உருவம் செய்து நூதன வழிபாடு!

NESARAJAN🕒 நவ. 26
அதிரடி: தரம் பிரிக்காமல் குப்பை கொடுத்த கடைக்கு அபராதம் விதித்த மாநகராட்சி!செய்திகள்

அதிரடி: தரம் பிரிக்காமல் குப்பை கொடுத்த கடைக்கு அபராதம் விதித்த மாநகராட்சி!

JOWIN AKASH🕒 நவ. 26
மின்கசிவால் கேஸ் ஆபீஸ் எரிந்து நாசம்: 2 சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு!நகரங்கள்

மின்கசிவால் கேஸ் ஆபீஸ் எரிந்து நாசம்: 2 சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு!

Srinivasan🕒 நவ. 26
180 டாஸ்மாக் பணியிடங்கள் காலி... கலந்தாய்வை ஒத்திவைக்க மயிலாடுதுறை ஊழியர்கள் கோரிக்கை!செய்திகள்

180 டாஸ்மாக் பணியிடங்கள் காலி... கலந்தாய்வை ஒத்திவைக்க மயிலாடுதுறை ஊழியர்கள் கோரிக்கை!

SASHVI🕒 நவ. 26
TNO வாட்ஸ்அப் சானல் ➔