திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடையில், பழுதுபார்ப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்து பதுங்கியிருந்தது. இதனைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக வாணியம்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், இருசக்கர வாகனத்திற்குள் மறைந்திருந்த பாம்பை சுமார் அரை மணி நேரம் போராடி லாவகமாகப் பிடித்தனர். பின்னர் பிடிபட்ட பாம்பை பாதுகாப்பாக பாட்டிலில் அடைத்து எடுத்துச் சென்றனர். தீயணைப்புத் துறையினரின் துரித நடவடிக்கையால் பாம்பு பிடிபட்டதைத் தொடர்ந்து, கடை உரிமையாளர் மற்றும் வாகன ஓட்டி நிம்மதி அடைந்தனர்.
செய்திகள்
வாகனத்திற்குள் புகுந்த பாம்பு அரை மணி நேரம் நீடித்த பரபரப்பு.
🕒 21 நவ., 2026, 02:38 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨
AI Highlights
- •திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருசக்கர வாகனத்திற்குள் புகுந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் அரை மணி நேரம் போராடி மீட்டனர். அப்பகுதியில் பெரும் பரபரப்பு.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








