Settings

முகப்பு/செய்திகள்/திருவாரூர்: மூதாட்டியைத் தாக்கி நகை கொள்ளை - 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது!
செய்திகள்

திருவாரூர்: மூதாட்டியைத் தாக்கி நகை கொள்ளை - 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது!

🕒 16 நவ., 2026, 11:47 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திருவாரூர்: மூதாட்டியைத் தாக்கி நகை கொள்ளை - 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருவாரூர் அருகே வயலில் ஆடு மேய்த்த மூதாட்டியைத் தாக்கி நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், பக்கத்து வீட்டுக்காரர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவாரூர் மாவட்டம் வைப்பூர் காவல் சரகம் உட்பட்ட நடப்பூர் பகுதியில், வயல்வெளியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியைத் தாக்கி நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், 24 மணி நேரத்திற்குள் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

நடப்பூரைச் சேர்ந்த ரெங்கசாமி என்பவரது மனைவி இந்திராணி (65). இவர் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் ஆடு மற்றும் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, பின்னால் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், திடீரெனக் கட்டையால் இந்திராணியின் தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே மயங்கி விழுந்தார்.

மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியைச் கடந்து சென்ற பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு, 108 அவசர ஊர்தி மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வைப்பூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், காயமடைந்த இந்திராணிக்கும் அவரது பக்கத்து வீட்டுக்காரரான மனோகரன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. மனோகரனின் மாடு அடிக்கடி இந்திராணியின் வீட்டுக்குள் நுழைந்ததால், இந்திராணி அவரைத் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மனோகரன், இந்திராணியைப் பழிவாங்க எண்ணி, அவர் தனியாக ஆடு மேய்க்கச் சென்றபோது முகத்தை மூடிக்கொண்டு கட்டையால் தாக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தாக்குதலின் போது மூதாட்டியின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியும் அறுந்து கைக்கு வந்ததாகக் குற்றவாளி ஒப்புக்கொண்டுள்ளார்.

சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியைக் கைது செய்து திறம்பட செயல்பட்ட வைப்பூர் காவல் துறையினரை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) சதீஷ்குமார் பாராட்டினார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!செய்திகள்

தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!

Rajan🕒 நவ. 22
தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!செய்திகள்

தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!

Rajan🕒 நவ. 22
வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!செய்திகள்

வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

S. Ravichandran🕒 நவ. 22
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்விஅரசியல்

மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!செய்திகள்

யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!

S. Ravichandran🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔