திருக்கோவிலூர் மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டிடத்தை திறக்க வலியுறுத்தி தேமுதிக சார்பில் கடந்த 10-ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேமுதிக மாவட்ட கழக செயலாளரும், திருக்கோவிலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எல். வெங்கடேசன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (நவம்பர் 18, 2026) தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இந்த புதிய மருத்துவமனை கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து, மருத்துவமனை திறப்பு விழாவிற்கு வழிவகுத்த இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் தேமுதிக மாவட்ட செயலாளர் எல். வெங்கடேசன் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.









