திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உமையப்ப நாயக்கனூர் மலைகிராம பகுதியைச் சேர்ந்த ஐந்து விவசாயிகள், ஊத்தங்கரையில் நடைபெறும் மாட்டுச் சந்தையில் விற்பனை செய்வதற்காக மாடுகளை சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். அப்போது ஜமுனாமரத்தூர் - ஆலங்காயம் மலைச்சாலையில் உள்ள ஆர்.எம்.எஸ். புதூர் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது பயங்கரமாக மோதியதில், சரக்கு வாகனத்தில் பயணம் செய்த விவசாயிகளான சங்கர் மற்றும் பூபதி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், மேலும், வாகனத்தில் பயணம் செய்த மணிகண்டன், முருகேசன், கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் , சரக்கு வாகனத்தில் இருந்த 2 மாடுகளும் உயிரிழந்துள்ளது.. மேலும் இந்த விபத்து குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவலூர் காவல்துறையினர், காயமடைந்த மூவரையும் மீட்டு, சிகிச்சைக்காக, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாட்டுச் சந்தைக்கு, மாடுகளை ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம் புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், இரண்டு விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள்
கோர விபத்து: சரக்கு வாகனம் மரத்தில் மோதி 2 விவசாயிகள் பலி
🕒 13 நவ., 2026, 02:56 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 3
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (3)படத்தைத் தொடவும்
✨
AI Highlights
- •திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சரக்கு வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் 2 விவசாயிகள் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








