மறைந்த தவெக மூத்த தலைவரும், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.எஸ். பாபுவின் மறைவுக்கு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவட்ட இணை செயலாளர் பாலமுருகன் தலைமையில் திரண்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மெழுகுவர்த்தி ஏந்தி இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தி தங்களது இரங்கலைத் தெரிவித்தனர்.









