மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா செங்குடி பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (30). திருமணமாகாத இவர், இன்று தனது இருசக்கர வாகனத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்வரனை ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, முன்னால் சென்ற சிமெண்ட் கலவை ஏற்றிச் செல்லும் லாரியை, வினோத் இடது புறமாக முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் கீழே சரிந்ததில், வினோத் கீழே விழுந்து லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவருடன் பின்னால் அமர்ந்து வந்த ராஜேஸ்வரன் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், வேட்டங்குடியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் குணசேகரனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.









