Settings

முகப்பு/அரசியல்/நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க மார்ச் வரை அவகாசம் வேண்டும் - ஈரோடு விசைத்தறி சங்கங்கள் கோரிக்கை!
அரசியல்

நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க மார்ச் வரை அவகாசம் வேண்டும் - ஈரோடு விசைத்தறி சங்கங்கள் கோரிக்கை!

🕒 21 நவ., 2026, 10:27 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க மார்ச் வரை அவகாசம் வேண்டும் - ஈரோடு விசைத்தறி சங்கங்கள் கோரிக்கை! - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •பொங்கல் இலவச வேஷ்டி சேலை உற்பத்தியை விசைத்தறி மற்றும் கைத்தறிகளில் மட்டுமே மேற்கொள்ளவும், கால அவகாசத்தை மார்ச் வரை நீட்டிக்கவும் கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் அமைச்சர் விஜய் பாலாஜியிடம் மனு

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த தமிழக கைத்தறித் துறை அமைச்சரிடம், ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் எல்.கே.எம். சுரேஷ், மாநிலச் செயலாளர் இரா. வேலுச்சாமி, மாநிலப் பொருளாளர் கே. பாலசுப்ரமணியம் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் 1 கோடியே 77 லட்சம் இலவச வேஷ்டி, சேலைகளை விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் காக்கும் வகையில் அவர்களிடம் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், காலதாமதத்தைக் காரணம் காட்டி தானியங்கி தறிகளில் (ஆட்டோலூம்) உற்பத்தி செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, கூட்டம் முடிந்ததும் தங்களைச் சந்தித்து ஆலோசனை நடத்துவதாக அமைச்சர் உறுதியளித்ததன் பேரில் நிர்வாகிகள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருந்த நிலையில், கூட்டம் முடிந்து அமைச்சர் தங்களைச் சந்திக்காமல் புறப்பட்டுச் சென்றதால் ஏமாற்றமடைந்த கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் எல்.கே.எம். சுரேஷ் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், எம்.ஜி.ஆர். காலம் முதல் நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தில், இந்த ஆண்டு புதிய வடிவத்தில் தரமான மற்றும் சலவை செய்யப்பட்ட (பிளீச்சிங்) வேஷ்டி, சேலைகளை வழங்க அரசு முடிவு செய்ததால் உற்பத்தி ஆணை தாமதமாக வழங்கப்பட்டு தற்போது வரை 45 முதல் 50 சதவீத உற்பத்திப் பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்தார். வழக்கமாக ஜூன் மாதம் ஆணை பிறப்பிக்கப்பட்டு ஆறு முதல் ஏழு செட் பாவுகள் நெய்யப்படும் நிலையில், தீபாவளி விடுமுறை மற்றும் சலவைப் பணிகளுக்கான கால அவகாசம் காரணமாக இதுவரை இரண்டு செட் பாவுகள் மட்டுமே முடிந்துள்ளதால் டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் பணிகளை முடிப்பது சாத்தியமற்றது என்றும், எனவே நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு உற்பத்தி கால அவகாசத்தை மார்ச் மாதம் வரை நீட்டித்து, ஆட்டோலூம்களில் உற்பத்தி செய்வதைத் தடுத்து விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு முழு வேலைவாய்ப்பு வழங்க முதலமைச்சர் மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
40 நெசவாளர்களுக்கு தீயணைப்பு கருவிகள் மற்றும் ZED சான்றிதழ் வழங்கிய கே.பி. ராமலிங்கம்அரசியல்

40 நெசவாளர்களுக்கு தீயணைப்பு கருவிகள் மற்றும் ZED சான்றிதழ் வழங்கிய கே.பி. ராமலிங்கம்

SRIDHAR🕒 நவ. 21
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: களத்தில் இறங்க அதிமுக தலைமை உத்தரவு!அரசியல்

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: களத்தில் இறங்க அதிமுக தலைமை உத்தரவு!

Arivazhagan🕒 நவ. 20
திசையற்ற அரசாகச் செயல்படும் புதிய அரசு - நெல்லையில் திமுக எம்பி கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கடும் விமர்சனம்அரசியல்

திசையற்ற அரசாகச் செயல்படும் புதிய அரசு - நெல்லையில் திமுக எம்பி கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கடும் விமர்சனம்

Vijayaragavan🕒 நவ. 20
திருப்பரங்குன்றம் தீபம்: அரசு வெள்ளை அறிக்கை வெளியிட நயினார் நாகேந்திரன் கோரிக்கைஅரசியல்

திருப்பரங்குன்றம் தீபம்: அரசு வெள்ளை அறிக்கை வெளியிட நயினார் நாகேந்திரன் கோரிக்கை

Vijayaragavan🕒 நவ. 20
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!செய்திகள்

யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!

S. Ravichandran🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔