கரூர் மாவட்டம், கரூர் கிழக்கு ஒன்றியம் காதப்பாறை ஊராட்சி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி சிராஜுதீன், அந்தக் கட்சியில் இருந்து விலகி தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கரூர் கிழக்கு ஒன்றிய அதிமுக கழக செயலாளர் சரவணன் தலைமையில், கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் கமலக்கண்ணன் முன்னிலையில் சிராஜுதீன் அதிகாரப்பூர்வமாக தன்னை அஇஅதிமுகவில் இணைத்துக் கொண்டார்.









