திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பேருந்து நிலையங்களில் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்ட மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள், கொங்கு நண்பர்கள் அன்னதான அறக்கட்டளையின் சார்பில் கடந்த 26 ஆண்டுகளாகத் தொடர்ந்து தீபத் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அன்னதான நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது, பக்தர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய மாண்புமிகு அமைச்சர் , அறக்கட்டளையின் அறங்காவலர்களுடன் கலந்துரையாடி, பக்தர்களுக்கு எவ்வித எதிர்பார்ப்புமின்றி தொடர்ந்து ஆற்றி வரும் இத்தகைய உன்னதமான சேவையை வெகுவாகப் பாராட்டினார்.மேலும், பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவுடன் சிறிதளவு இனிப்பும் சேர்த்து வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொண்டார். மாண்புமிகு அமைச்சரின் வேண்டுகோளை ஏற்ற அறக்கட்டளை நிர்வாகத்தினர், இனிவரும் நாட்களில் உணவுடன் இனிப்பும் சேர்த்து வழங்குவதாகத் தெரிவித்தனர். பக்தர்களுக்கு உணவளிக்கும் உன்னதமான அன்னதானப் பணியைப் பாராட்டி, அதில் தாமும் பங்கேற்று பக்தர்களுடன் அமர்ந்து உணவருந்திய மாண்புமிகு அமைச்சரின் செயல் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அரசியல்
திருவண்ணாமலை தீபத் திருவிழா: பக்தர்களுடன் அமர்ந்து அன்னதானம் அருந்திய அமைச்சர்
🕒 23 நவ., 2026, 02:43 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨
AI Highlights
- •திருவண்ணாமலை தீபத் திருவிழா: பக்தர்களுடன் அமர்ந்து அன்னதானம் அருந்திய அமைச்சர்
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








