நினைத்தாலே முக்தி அளிக்கும் ஸ்தலமாகப் போற்றப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் செய்தார்.
திருக்கோவிலுக்கு வருகை தந்த இசைஞானி இளையராஜா, சம்மந்த விநாயகர் மற்றும் அண்ணாமலையார் உடனுறை உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் நவகிரக வழிபாட்டிலும் ஈடுபட்டார்.
பின்னர், அண்ணாமலையார் சன்னதிக்கு முன்பாக உள்ள ஸ்தல விருட்சமான ஒலி மரத்தை வணங்கி வழிபட்டார். இவரின் வருகையையொட்டி, அண்ணாமலையார் திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிவாச்சாரியார்கள் அவருக்கு மாலை அணிவித்து, பிரசாதங்களை வழங்கி மரியாதை செய்தனர். இந்நிகழ்வின் போது கோவில் அதிகாரிகள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.









