Settings

முகப்பு/விளையாட்டு/சொந்த கியூஆர் கோடு மூலம் ரூ.7 லட்சம் அடித்து தூக்கிய செஸ் பயிற்சியாளர் அதிரடி கைது!
விளையாட்டு

சொந்த கியூஆர் கோடு மூலம் ரூ.7 லட்சம் அடித்து தூக்கிய செஸ் பயிற்சியாளர் அதிரடி கைது!

🕒 6 நவ., 2026, 02:30 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சொந்த கியூஆர் கோடு மூலம் ரூ.7 லட்சம் அடித்து தூக்கிய செஸ் பயிற்சியாளர் அதிரடி கைது! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •நெல்லையில் செஸ் அகாடமி மாணவர்களிடம் சொந்த கியூஆர் கோடு மூலம் ரூ.7 லட்சம் வரை கட்டணம் வசூலித்து மோசடி செய்த பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நெல்லையில் கியூஆர் (QR) கோடு மூலம் மாணவர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் வரை வசூலித்து மோசடி செய்த செஸ் அகாடமி பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் விருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் செல்வ மணிகண்டன். இவர் அப்பகுதியில் செஸ் பயிற்சி அகாடமி நடத்தி வருகிறார். இந்த அகாடமியின் பெருமாள்புரம் கிளையில், ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி பகுதியைச் சேர்ந்த சவுந்திரபாண்டியன் மகன் விக்னேஷ் (24) என்பவர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பயிற்சியாளராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், அகாடமியின் அதிகாரப்பூர்வ கியூஆர் கோடுக்கு பதிலாக தனது சொந்த 'கூகுள் பே' (Google Pay) கியூஆர் கோடை பயன்படுத்தியும், ரொக்கமாகவும் மாணவர்களிடம் இருந்து மாதாந்திரக் கட்டணங்களை விக்னேஷ் பெற்று முறைகேடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார். மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதாந்திரக் கட்டணத் தொகையான ரூ.50,000 முதல் ரூ.60,000 வரையிலான தொகையை, கடந்த 14 மாதங்களில் சுமார் ரூ.6 லட்சம் முதல் ரூ.7 லட்சத்துக்கும் மேல் அகாடமி நிர்வாகத்திற்குத் தெரியாமல் அவர் கையாடல் செய்துள்ளார்.

விக்னேஷின் இந்த முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, அவரை அகாடமி நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியது. இருப்பினும், பணியை விட்டு நின்ற பிறகும் கூட பெருமாள்புரம் கிளையில் பயின்று வரும் மாணவர்களின் பெற்றோரிடம் தொடர்ந்து தனது சொந்த கூகுள் பே கணக்கிற்கே பணம் பெற்று வந்துள்ளார். இதுகுறித்து அகாடமி உரிமையாளர் செல்வ மணிகண்டன் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த விக்னேஷை அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மாரத்தான் போட்டி: ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்!விளையாட்டு

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மாரத்தான் போட்டி: ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்!

NESARAJAN🕒 நவ. 18
மாநில அளவிலான சிலம்பம் போட்டி: தேவலாபுரம் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்!விளையாட்டு

மாநில அளவிலான சிலம்பம் போட்டி: தேவலாபுரம் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்!

Srinivasan🕒 நவ. 18
உலக தாய் பாக்சிங் சாம்பியன்ஷிப்: பதக்கங்களுடன் தமிழகம் திரும்பிய வீரர்களுக்கு நாமக்கல்லில் உற்சாக வரவேற்பு!விளையாட்டு

உலக தாய் பாக்சிங் சாம்பியன்ஷிப்: பதக்கங்களுடன் தமிழகம் திரும்பிய வீரர்களுக்கு நாமக்கல்லில் உற்சாக வரவேற்பு!

SRIDHAR🕒 நவ. 17
சிலம்பக் கலையை வளர்க்க தனி நிதி ஒதுக்கீடு கோரி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பு!விளையாட்டு

சிலம்பக் கலையை வளர்க்க தனி நிதி ஒதுக்கீடு கோரி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பு!

Vijayaragavan🕒 நவ. 17
பேரறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியை ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்!விளையாட்டு

பேரறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியை ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்!

Anandakumar🕒 நவ. 15
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔