Settings

முகப்பு/விளையாட்டு/போதை விழிப்புணர்வு மாரத்தானில் 5 கி.மீ தூரத்தை அசால்ட்டாக ஓடிக் கடந்த 2-ம் வகுப்பு மாணவி யார் தெரியுமா?
விளையாட்டு

போதை விழிப்புணர்வு மாரத்தானில் 5 கி.மீ தூரத்தை அசால்ட்டாக ஓடிக் கடந்த 2-ம் வகுப்பு மாணவி யார் தெரியுமா?

🕒 4 நவ., 2026, 06:07 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
போதை விழிப்புணர்வு மாரத்தானில் 5 கி.மீ தூரத்தை அசால்ட்டாக ஓடிக் கடந்த 2-ம் வகுப்பு மாணவி யார் தெரியுமா? - படம் 1 - The News Outlook
📸1 / 5
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (5)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 5 கி.மீ தூரத்தை அசால்ட்டாக ஓடிக் கடந்த 2-ம் வகுப்பு மாணவிக்குக் காவல்துறையினர் சிறப்புப் பரிசு வழங்கிப் பாராட்டினர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், காவல்துறை சார்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியா கொடியசைத்து இந்த போட்டியைத் தொடங்கி வைத்தார்.

அரசூரில் தொடங்கி சீர்காழி காவல் நிலையம் வரை நடைபெற்ற 5 கிலோமீட்டர் தூர மாரத்தான் போட்டியில், பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் சீர்காழி காவல்துறையினர் திரளாகக் கலந்துகொண்டனர். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்தவர்களுக்குக் கேடயங்கள் வழங்கப்பட்டன.

குறிப்பாக, இப்போட்டியில் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவி தமிழ் தர்ஷிகா, 5 கிலோமீட்டர் தூரத்தை எந்தவித சோர்வுமின்றி முழுமையாக ஓடிக் கடந்தார். அவருடன் அவரது தாயாரும் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்று உற்சாகப்படுத்தினார். திறமையாகவும் ஆர்வத்துடனும் ஓடிய சிறுமியைப் பாராட்டிய காவல்துறையினர், அவருக்குச் சிறப்புப் பரிசு வழங்கி கவுரவித்தனர். மேலும், போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன், காவல் ஆய்வாளர்கள் கமல்ராஜ், புயல் பாலச்சந்திரன் உள்ளிட்ட உயரதிகாரிகளும் ஏராளமான காவலர்களும் உடனிருந்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மாரத்தான் போட்டி: ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்!விளையாட்டு

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மாரத்தான் போட்டி: ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்!

NESARAJAN🕒 நவ. 18
மாநில அளவிலான சிலம்பம் போட்டி: தேவலாபுரம் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்!விளையாட்டு

மாநில அளவிலான சிலம்பம் போட்டி: தேவலாபுரம் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்!

Srinivasan🕒 நவ. 18
உலக தாய் பாக்சிங் சாம்பியன்ஷிப்: பதக்கங்களுடன் தமிழகம் திரும்பிய வீரர்களுக்கு நாமக்கல்லில் உற்சாக வரவேற்பு!விளையாட்டு

உலக தாய் பாக்சிங் சாம்பியன்ஷிப்: பதக்கங்களுடன் தமிழகம் திரும்பிய வீரர்களுக்கு நாமக்கல்லில் உற்சாக வரவேற்பு!

SRIDHAR🕒 நவ. 17
சிலம்பக் கலையை வளர்க்க தனி நிதி ஒதுக்கீடு கோரி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பு!விளையாட்டு

சிலம்பக் கலையை வளர்க்க தனி நிதி ஒதுக்கீடு கோரி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பு!

Vijayaragavan🕒 நவ. 17
பேரறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியை ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்!விளையாட்டு

பேரறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியை ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்!

Anandakumar🕒 நவ. 15
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔