Settings

முகப்பு/விளையாட்டு/வாணியம்பாடியில் போதைப்பொருள் இல்லா இளைஞர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
விளையாட்டு

வாணியம்பாடியில் போதைப்பொருள் இல்லா இளைஞர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

🕒 7 நவ., 2026, 10:02 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
வாணியம்பாடியில் போதைப்பொருள் இல்லா இளைஞர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மை பாரத் கேந்திரா சார்பில் போதைப்பொருள் இல்லா இளைஞர்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருப்பத்தூர் மை பாரத் கேந்திரா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இளைஞர் மன்றம் இணைந்து நடத்திய "அண்டை நாட்டு இளைஞர் பாராளுமன்றம் 2026-27" நிகழ்ச்சி தாஸ் மெடிக்கல் அகாடமி வளாகத்தில் நடைபெற்றது. "போதைப்பொருள் இல்லா இளைஞர்கள்" என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட இளைஞர் அலுவலர் ஜி. தம்பி பிரபாகரன் தலைமை தாங்கினார். மை பாரத் கேந்திரா திட்ட அலுவலர் எம். கௌதமன் மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இளைஞர் மன்றத் தலைவர் வி. சிலம்பரசன் ஆகியோர் வரவேற்றனர். இதில் திருப்பத்தூர் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரன், சார்பு ஆய்வாளர் ராஜ்குமார், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் எஸ். நேதாஜி, டாக்டர் ஜி. சத்யா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் கலந்து கொண்டு போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள், சைபர் குற்றங்கள், உடல்நலம், மனநலம் மற்றும் இளைஞர்களின் சமூகப் பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினர். மேலும் வழக்கறிஞர் கே. ரஞ்சித் குமார், வி. பழனி வெங்கட், ஏ. வேதாசலம், பேராசிரியர் ஏ. நூருல் அமீன், ஆராய்ச்சியாளர் எம். பிரபு, இந்தியன் வங்கி கிளை மேலாளர் எம். பிரதீப் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நிறைவாக நல்வாழ்வு மையம் அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் நளினி நன்றியுரை கூறினார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மாரத்தான் போட்டி: ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்!விளையாட்டு

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மாரத்தான் போட்டி: ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்!

NESARAJAN🕒 நவ. 18
மாநில அளவிலான சிலம்பம் போட்டி: தேவலாபுரம் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்!விளையாட்டு

மாநில அளவிலான சிலம்பம் போட்டி: தேவலாபுரம் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்!

Srinivasan🕒 நவ. 18
உலக தாய் பாக்சிங் சாம்பியன்ஷிப்: பதக்கங்களுடன் தமிழகம் திரும்பிய வீரர்களுக்கு நாமக்கல்லில் உற்சாக வரவேற்பு!விளையாட்டு

உலக தாய் பாக்சிங் சாம்பியன்ஷிப்: பதக்கங்களுடன் தமிழகம் திரும்பிய வீரர்களுக்கு நாமக்கல்லில் உற்சாக வரவேற்பு!

SRIDHAR🕒 நவ. 17
சிலம்பக் கலையை வளர்க்க தனி நிதி ஒதுக்கீடு கோரி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பு!விளையாட்டு

சிலம்பக் கலையை வளர்க்க தனி நிதி ஒதுக்கீடு கோரி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பு!

Vijayaragavan🕒 நவ. 17
பேரறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியை ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்!விளையாட்டு

பேரறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியை ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்!

Anandakumar🕒 நவ. 15
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔