மகாராஷ்டிரா மாநிலம் பூனாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சி.பி.எஸ்.இ. ஏரோபிக்ஸ் போட்டியில், கரூர் பரணி வித்யாலயா பள்ளி மாணவர்கள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று தேசிய சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.
போட்டி முடிவுகள்:
- 14 வயதிற்குட்பட்டோர் பிரிவு: அகில், சுதீப், சபரி எஸ்வந்த், பவிஷ், ராம்சரண், ஸ்ரீ பிரிஜேஸ் மற்றும் ராம் சரண் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.
- 19 வயதிற்குட்பட்டோர் பிரிவு: செல்வ யாழினி, நேத்ரா, பிரணவி, ஸ்ரீ தர்ஷினி, சாருஸ்ரீ மற்றும் இலக்கியா ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
- 11 வயதிற்குட்பட்டோர் பிரிவு: ஆராதனா, நேத்ரா, மித்ரா, ஆதிரா, தனுஸ்ரீ, ரியா ராஜ்குமார், ஸ்ரீ நவிகா மற்றும் சர்மதா ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர்.
- 14 வயதிற்குட்பட்டோர் பிரிவு: ரிதன்யா ஸ்ரீ, லக்ஷிதா, கனி ஸ்ரீ, சஸ்தா, வர்ணிகா மற்றும் ஸ்ரீ நிஷா ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தேசிய ஏரோபிக்ஸ் விளையாட்டு சம்மேளனத்தின் தலைவர் சந்தோஷ் கைர்னார், சம்மேளனத்தின் துணைத் தலைவரும் பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வருமான முனைவர் சொ.ராமசுப்பிரமணியன் மற்றும் பூனா எஸ்.என்.பி.பி பல்கலைக்கழக வேந்தர் போஸ்லே ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
மேலும், அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான சி.பி.எஸ்.இ. ஏரோபிக்ஸ் போட்டியில், கரணி பரணி வித்யாலயா அணி 9 தங்கம், 8 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை வென்று, தொடர்ந்து ஒன்பதாவது முறையாக மாநில ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்த மாணவர்களையும், பயிற்சியாளர் முத்துக்குமார் மற்றும் தேசிய நடுவர் சிவகாமி உள்ளிட்ட ஆசிரியர்களையும் பள்ளித் தாளாளர் சா.மோகனரங்கன், செயலர் பத்மாவதி மோகனரங்கன் மற்றும் நிர்வாகத்தினர் வெகுவாகப் பாராட்டினர்.









