Settings

முகப்பு/Top News/பச்சைமலை மக்களின் நீண்டநாள் கோரிக்கை: பெரம்பலூருடன் இணைக்க சாலை வசதி வேண்டும்
Top News

பச்சைமலை மக்களின் நீண்டநாள் கோரிக்கை: பெரம்பலூருடன் இணைக்க சாலை வசதி வேண்டும்

🕒 21 செப்., 2026, 10:38 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பச்சைமலை மக்களின் நீண்டநாள் கோரிக்கை: பெரம்பலூருடன் இணைக்க சாலை வசதி வேண்டும் - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •பச்சைமலை பாளையம் கிராமத்தில் இருந்து பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூரை இணைக்கும் வகையில் 5 கி.மீ. சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் கிராமத்தை பச்சைமலை பாளையம் கிராமத்துடன் இணைக்கும் வகையில் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்க வேண்டும் என பச்சைமலை பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பச்சைமலை பகுதியில் பாளையம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட சிறு கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்லவும், விவசாய இடுபொருட்களை வாங்கிச் செல்லவும் சுமார் 50 கிலோமீட்டர் தொலைவு பயணம் செய்து துறையூர் செல்ல வேண்டிய நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி தொடர்பாகவும், பொதுமக்கள் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காகவும் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது.

இந்த நிலையில், பச்சைமலை பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அப்துல் ராசிக்கை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், பாளையம் கிராமத்தில் இருந்து பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் கிராமத்தை இணைக்கும் வகையில் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதன் மூலம் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரம்பலூருக்கு எளிதாக வந்து செல்ல முடியும் என்றும், விவசாய விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கும், அத்தியாவசிய தேவைகளுக்காக சென்று வருவதற்கும் வசதியாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

மேலும், இந்த சாலை அமைப்பதற்கு வனத்துறையிடம் சிறப்பு அனுமதி பெற்று, வாகனங்கள் சென்று வரும் வகையில் சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், இதனால் தங்களது வாழ்வாதாரம் மேம்படும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், கோரிக்கை குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
வாலிபர் கொலை வழக்கில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!Top News

வாலிபர் கொலை வழக்கில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

Admin🕒 செப். 21
அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 637 மனுக்கள் பெறப்பட்டனTop News

அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 637 மனுக்கள் பெறப்பட்டன

Admin🕒 செப். 21
அரியலூரில் கொலை வழக்கில் நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை; சாலை மறியலால் பரபரப்புTop News

அரியலூரில் கொலை வழக்கில் நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை; சாலை மறியலால் பரபரப்பு

Admin🕒 செப். 21
கல்குவாரி அனுமதியை ரத்து செய்யக் கோரி தாதனூத்து கிராம மக்கள் தர்ணா.!Top News

கல்குவாரி அனுமதியை ரத்து செய்யக் கோரி தாதனூத்து கிராம மக்கள் தர்ணா.!

Vijayaragavan🕒 செப். 21
பக்தி பரவசத்தில் நாகை மாவட்டம்! சொர்ணபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் விமரிசை!செய்திகள்

பக்தி பரவசத்தில் நாகை மாவட்டம்! சொர்ணபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் விமரிசை!

Sugumaran🕒 நவ. 22
அதிர்ச்சி! விவசாய நிலத்தில் உலா வந்த மலைப்பாம்பு - ஏலகிரி மலையில் விட்ட இளைஞர்கள்!செய்திகள்

அதிர்ச்சி! விவசாய நிலத்தில் உலா வந்த மலைப்பாம்பு - ஏலகிரி மலையில் விட்ட இளைஞர்கள்!

ARAVINDHAN🕒 நவ. 22
அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்துஅரசியல்

அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்து

Dinesh🕒 நவ. 22
தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி மீது தாக்குதல்: 5 பேர் கைது!செய்திகள்

தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி மீது தாக்குதல்: 5 பேர் கைது!

Rajan🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔