Settings

முகப்பு/வணிகம்/தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள். தரைக் கடைகளில் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி:-
வணிகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள். தரைக் கடைகளில் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி:-

🕒 1 நவ., 2026, 10:39 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள். தரைக் கடைகளில் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி:- - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தீபாவளி பண்டிகை வரும் ஞாயிறன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் மயிலாடுதுறை கடைவீதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை வாங்க பொதுமக்கள் குவிந்தனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வண்டிக்கார தெரு, காந்திஜி சாலை, நம்பர் 2 ரோடு, பெரிய கடைவீதிகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. புத்தாடைகள் வாங்க ஜவுளி கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர். மேலும் தரைக்கடை வியாபாரிகள் குறைந்த விலையில் புத்தாடைகளை வைத்து வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில் பொதுமக்கள் ஆர்வமுடன் தரைக்கடை வியாபாரிகளிடம் துணிகள் வாங்கியதால் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்களது குடும்பத்தினருக்கும், குழந்தைகளுக்கும் புத்தாடைகள் வாங்குவதிலும், பட்டாசுகள், இனிப்புகள் மற்றும் பண்டிகைக்குத் தேவையான இதர பொருட்களை வாங்குவதிலும் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் நகரின் முக்கிய வீதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன், இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக காந்திஜி சாலை, பட்டமங்கலம் தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது. போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் மயிலாடுதுறை போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!செய்திகள்

யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!

S. Ravichandran🕒 நவ. 22
முட்டை பிரியர்களுக்கு குட் நியூஸ்: அதிரடியாகக் குறைந்த முட்டை விலை!செய்திகள்

முட்டை பிரியர்களுக்கு குட் நியூஸ்: அதிரடியாகக் குறைந்த முட்டை விலை!

SRIDHAR🕒 நவ. 22
குத்தாலத்தில் எண்ணெய் கிணறு பராமரிப்பு: நிலத்தடி நீர் மாசுபடுவதாக மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டுசெய்திகள்

குத்தாலத்தில் எண்ணெய் கிணறு பராமரிப்பு: நிலத்தடி நீர் மாசுபடுவதாக மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டு

SASHVI🕒 நவ. 22
சொகுசு காரில் குட்கா கடத்தல்: ஈரோட்டில் அதிரடி வேட்டை!செய்திகள்

சொகுசு காரில் குட்கா கடத்தல்: ஈரோட்டில் அதிரடி வேட்டை!

Dinesh🕒 நவ. 22
பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!ஆன்மீகம்

பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!

VASANTHA🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔