நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில், உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் கொடியசைத்துத் தொடங்கி வைத்து, வீரர்களை ஊக்கப்படுத்தினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் போட்டிகளில் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.









