திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலை நிலாவூர் ரானேரி கூட்ரோடு பகுதியில், உரிய அனுமதியின்றி பட்டப்பகலில் பாறைகள் வெடிக்கப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தனியாருக்குச் சொந்தமான இடத்தில், அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறாமல் பாறைகளில் துளையிட்டு வெடிவைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் அதிர்வுகள் ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டவிரோதச் செயல் குறித்துப் புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கண்டும் காணாமல் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.









