Settings

முகப்பு/நகரங்கள்/தனிநபர் அடைத்த சாக்கடை கால்வாய்: அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் மக்கள் மகிழ்ச்சி
நகரங்கள்

தனிநபர் அடைத்த சாக்கடை கால்வாய்: அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் மக்கள் மகிழ்ச்சி

🕒 20 நவ., 2026, 02:05 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தனிநபர் அடைத்த சாக்கடை கால்வாய்: அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் மக்கள் மகிழ்ச்சி - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •மணப்பாறை சாய்நகரில் சாக்கடை கால்வாய் அடைக்கப்பட்டதால் ஏற்பட்ட பிரச்சனையில், அதிகாரிகளின் உறுதியை அடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டு சாய்நகரில் சுமார் 110 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் பொதுமக்களின் கழிவுநீர் செல்லும் கால்வாயை தனிநபர் ஒருவர் அடைத்ததால், தேங்கியுள்ள கழிவுநீரால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மற்றும் பொதுமக்கள் இணைந்து நாளை காலை 11 மணிக்கு நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, நகராட்சி அதிகாரிகளும் காவல்துறையினரும் உடனடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட நபரின் மதில்சுவரை உடைத்து தேங்கிய கழிவுநீரை வெளியேற்றினர். மேலும், CPI(ML) கட்சித் தலைவர்களைத் தொடர்பு கொண்ட அதிகாரிகள், ஒரு வாரத்திற்குள் இதற்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வரும் 25.11.2026 புதன்கிழமை அன்று அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்றும் உத்தரவாதம் அளித்தனர். இதனையடுத்து, தற்காலிகமாகப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!நகரங்கள்

மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

Vijay🕒 நவ. 21
மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!நகரங்கள்

மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!

Ramachandran🕒 நவ. 21
கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கைநகரங்கள்

கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

VASANTHA🕒 நவ. 21
பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமிநகரங்கள்

பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி

JOWIN AKASH🕒 நவ. 21
திருச்சி மக்களே கவனத்திற்கு! நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம் - முழு விவரம் இதோ!!நகரங்கள்

திருச்சி மக்களே கவனத்திற்கு! நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம் - முழு விவரம் இதோ!!

MSD🕒 நவ. 21
திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு நேரடி பேருந்து சேவை கோரி பொதுமக்கள் அவதி!செய்திகள்

திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு நேரடி பேருந்து சேவை கோரி பொதுமக்கள் அவதி!

Rajan🕒 நவ. 22
பட்டுக்கோட்டையில் பரபரப்பு: போலீசாரை மிரட்டி உடல் தகனம் செய்த 10 பேர் மீது வழக்கு!செய்திகள்

பட்டுக்கோட்டையில் பரபரப்பு: போலீசாரை மிரட்டி உடல் தகனம் செய்த 10 பேர் மீது வழக்கு!

Rajan🕒 நவ. 22
தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி மீது தாக்குதல்: 5 பேர் கைது!செய்திகள்

தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி மீது தாக்குதல்: 5 பேர் கைது!

Rajan🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔