புதுக்கோட்டை மாநகருக்குள் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்போர் ரசீதுகளை அப்படி அப்படியே விட்டு செல்வதால் ஏராளமான குப்பைகள் சேர்ந்து விடுகின்றன. இதுகுறித்து புதுக்கோட்டை மன்னர் கல்லூரியின் பணி நிறைவு பெற்ற வரலாற்றுத் துறை பேராசிரியர் விஸ்வநாதன் கூறுகையில் வங்கி ஏடிஎம்களை மக்கள் இப்போது உள்ள அறிவியல் வளர்ச்சி மற்றும் இயந்திர வளர்ச்சி களின் காரணமாக எளிதாக பயன்படுத்தும் வகையில் பணம் எடுப்பதற்காக மட்டுமல்ல வங்கியில் செலுத்துவதற்கும் இந்த ஏடிஎம் சென்டர்களை வங்கியே திறந்து வைத்துள்ளது. இந்த ஏடிஎம் சென்டர்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் ரசீதுகளை அப்படி அப்படியே போட்டு விட்டுச் சென்று விடுகின்றனர். இதனால் ஏராளமான காகித குப்பைகள் சேர்கின்றன. இந்நிலையில் வங்கிகள் எந்த அளவுக்கு சுத்தமாக தூய்மையாக வைத்திருக்கிறார்களோ அதே போல் ஏடிஎம் சென்டர்களையும் தூய்மையாக வைத்திருப்பது வங்கிகளின் கடமையாகும். ஒன்று வாடிக்கையாளர்களுக்கு இந்த ஏடிஎம் சென்டர்கள் மீது அக்கறை வேண்டும். அல்லது வங்கிச் சிப்பந்திகளுக்கு அக்கறை வேண்டும். ஏடிஎம் சென்டர்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் வேண்டும் என்றார்.
நகரங்கள்
ஏடிஎம் மையங்களை குப்பைத் தொட்டியாக்கும் மக்கள்!
🕒 14 நவ., 2026, 01:15 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
✨
AI Highlights
- •புதுக்கோட்டை எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் ரசீதுகள் வீசப்படுவதால் குப்பைகள் தேங்குவதாகவும், அவற்றைச் சுத்தமாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








