Settings

முகப்பு/செய்திகள்/வேலைக்குச் சென்ற நேரத்தில் விபரீதம்: திருப்பூர் ஹாஸ்டல் நிர்வாகத்தின் அத்துமீறலால் பரபரப்பு!
செய்திகள்

வேலைக்குச் சென்ற நேரத்தில் விபரீதம்: திருப்பூர் ஹாஸ்டல் நிர்வாகத்தின் அத்துமீறலால் பரபரப்பு!

🕒 6 நவ., 2026, 02:40 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
வேலைக்குச் சென்ற நேரத்தில் விபரீதம்: திருப்பூர் ஹாஸ்டல் நிர்வாகத்தின் அத்துமீறலால் பரபரப்பு! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருப்பூரில் லேடிஸ் ஹாஸ்டல் திடீரென காலி செய்யப்பட்டதால், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பணியாளரின் பொருள்கள் சாலையில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பூரில் லேடிஸ் ஹாஸ்டல் திடீரென காலி செய்யப்பட்டதால், அங்கு தங்கியிருந்த பெண்ணின் பொருள்கள் சாலையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூரில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் தங்கி பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெண்களின் பாதுகாப்பைக் கருதி, தனியார் தங்கும் விடுதிகளில் (லேடிஸ் ஹாஸ்டல்) தங்கி பணிக்கு சென்று வருவது வழக்கம். அந்த வகையில், பங்களா ஸ்டாப் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரி என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஹாஸ்டலை வேறு இடத்திற்கு மாற்றுவதற்காக, விடுதியை உடனடியாகக் காலி செய்யுமாறு அதன் நிர்வாகம் தரப்பில் குறைந்த நாட்களுக்கு முன்பு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் உடனடியாகப் புதிய இடத்திற்கு மாற முடியாத சூழல் இருந்ததால், மேலும் இரண்டு நாட்கள் மட்டும் தங்கிொள்ள அனுமதிக்குமாறு சுந்தரி கேட்டுள்ளார். ஆனால், அதற்கு ஹாஸ்டல் நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

இதற்கிடையே, சுந்தரி வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், ஹாஸ்டல் நிர்வாகிகளும் கட்டிடத்தின் உரிமையாளரும் இணைந்து அவரது உடைமைகள் மற்றும் பொருள்களைச் சாலையில் வீசிவிட்டு, கட்டிடத்தைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், வேறு வழியின்றி காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளார்.

தகவலறிந்து வந்த திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார், கட்டிடத்தைப் பூட்டிச் சென்ற ஹாஸ்டல் நிர்வாகி பூங்கொடி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரவு தங்குவதற்குப் பாதுகாப்பான ஏற்பாடுகளைக் காவல்துறையினர் செய்து கொடுத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
குத்தாலத்தில் எண்ணெய் கிணறு பராமரிப்பு: நிலத்தடி நீர் மாசுபடுவதாக மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டுசெய்திகள்

குத்தாலத்தில் எண்ணெய் கிணறு பராமரிப்பு: நிலத்தடி நீர் மாசுபடுவதாக மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டு

SASHVI🕒 நவ. 22
சொகுசு காரில் குட்கா கடத்தல்: ஈரோட்டில் அதிரடி வேட்டை!செய்திகள்

சொகுசு காரில் குட்கா கடத்தல்: ஈரோட்டில் அதிரடி வேட்டை!

Dinesh🕒 நவ. 22
குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!செய்திகள்

குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!

NESARAJAN🕒 நவ. 22
ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!செய்திகள்

ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!

NESARAJAN🕒 நவ. 22
திருவாரூரில் 18 மாதங்களாகப் பூட்டிக் கிடக்கும் நீச்சல் குளம்: புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கைசெய்திகள்

திருவாரூரில் 18 மாதங்களாகப் பூட்டிக் கிடக்கும் நீச்சல் குளம்: புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை

NESARAJAN🕒 நவ. 22
பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!ஆன்மீகம்

பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!

VASANTHA🕒 நவ. 22
11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!அரசியல்

11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!

VASANTHA🕒 நவ. 22
மீனவர் தின கொண்டாட்டம்: தூத்துக்குடியில் குவிந்த மீனவர்கள்!செய்திகள்

மீனவர் தின கொண்டாட்டம்: தூத்துக்குடியில் குவிந்த மீனவர்கள்!

JOWIN AKASH🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔