கரூர் மாவட்டத்தில் வரும் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறவுள்ள அதிமுக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருகை தரும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் கரிகாலன் தலைமையில் எம்.ஜி.ஆர். இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், வரவிருக்கும் கூட்டத்தில் கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி நிர்வாகிகளின் பங்களிப்பு குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பொறியாளர் கமலக்கண்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது எடப்பாடி பழனிசாமியின் வருகைக்கான ஏற்பாடுகள் மற்றும் ஆலோசனைக் கூட்டத்தின் முக்கியத்துவம் குறித்து அவர் நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி எடுத்துரைத்தார்.
இக்கூட்டத்தில், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் பசுவை சிவசாமி, மாவட்ட அவைத் தலைவர் திருவிக, மாவட்ட இணை செயலாளர் மல்லிகா சுப்பராயன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.









