Settings

முகப்பு/செய்திகள்/11 வருஷம் போலீசுக்கு போக்கு காட்டிய குற்றவாளி... சொந்த வீட்டிலேயே சிக்கியது எப்படி?
செய்திகள்

11 வருஷம் போலீசுக்கு போக்கு காட்டிய குற்றவாளி... சொந்த வீட்டிலேயே சிக்கியது எப்படி?

🕒 10 நவ., 2026, 04:43 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
11 வருஷம் போலீசுக்கு போக்கு காட்டிய குற்றவாளி... சொந்த வீட்டிலேயே சிக்கியது எப்படி? - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த திருட்டு வழக்கில், 11 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த பிடிவாரண்ட் குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த திருட்டு வழக்கில், 11 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த பிடிவாரண்ட் குற்றவாளியை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்தவர் ரியாஸ் அகமத். இவரது வீட்டில் கடந்த 2009-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட திருட்டுச் சம்பவத்தில், கம்ப்யூட்டர், டிவிடி பிளேயர் உள்ளிட்ட பல்வேறு மின்னணுப் பொருட்கள் திருடப்பட்டன. இதுகுறித்து ரியாஸ் அகமத் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த பள்ளிகொண்டா காவல் நிலையக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்தத் வழக்கில் தொடர்புடைய திருப்பத்தூர் ராஜிவ் காந்தி நகரைச் சேர்ந்த பாபு என்கின்ற அகமத் பாஷா (43) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்த அகமத் பாஷா, 2015-ம் ஆண்டு வரை நீதிமன்றத்தில் முறையாக ஆஜராகி வந்தார். அதன்பிறகு, நீதிமன்ற விசாரணைகளுக்கு ஆஜராகாமல் அவர் தலைமறைவானார்.

விசாரணைக்கு ஆஜராகாத அகமத் பாஷாவைக் கைது செய்ய உத்தரவிட்டு, கடந்த 2015-ம் ஆண்டு வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-5 மூலமாகப் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 2025-ம ஆண்டும் நீதிமன்றத்தால் மீண்டும் பிடிவாரண்ட் வழங்கப்பட்டது. இதற்கிடையே, தலைமறைவாக இருந்த அகமத் பாஷா தனது சொந்த வீட்டிலேயே பதுங்கியிருப்பதாகப் பள்ளிகொண்டா காவல் நிலையக் காவல்துறையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற காவல்துறையினர், வீட்டில் பதுங்கியிருந்த அகமத் பாஷாவை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். 11 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
குத்தாலத்தில் எண்ணெய் கிணறு பராமரிப்பு: நிலத்தடி நீர் மாசுபடுவதாக மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டுசெய்திகள்

குத்தாலத்தில் எண்ணெய் கிணறு பராமரிப்பு: நிலத்தடி நீர் மாசுபடுவதாக மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டு

SASHVI🕒 நவ. 22
சொகுசு காரில் குட்கா கடத்தல்: ஈரோட்டில் அதிரடி வேட்டை!செய்திகள்

சொகுசு காரில் குட்கா கடத்தல்: ஈரோட்டில் அதிரடி வேட்டை!

Dinesh🕒 நவ. 22
குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!செய்திகள்

குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!

NESARAJAN🕒 நவ. 22
ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!செய்திகள்

ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!

NESARAJAN🕒 நவ. 22
திருவாரூரில் 18 மாதங்களாகப் பூட்டிக் கிடக்கும் நீச்சல் குளம்: புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கைசெய்திகள்

திருவாரூரில் 18 மாதங்களாகப் பூட்டிக் கிடக்கும் நீச்சல் குளம்: புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை

NESARAJAN🕒 நவ. 22
பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!ஆன்மீகம்

பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!

VASANTHA🕒 நவ. 22
11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!அரசியல்

11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!

VASANTHA🕒 நவ. 22
மீனவர் தின கொண்டாட்டம்: தூத்துக்குடியில் குவிந்த மீனவர்கள்!செய்திகள்

மீனவர் தின கொண்டாட்டம்: தூத்துக்குடியில் குவிந்த மீனவர்கள்!

JOWIN AKASH🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔