Settings

முகப்பு/செய்திகள்/உள்பக்கம் தாழிடப்பட்டிருந்த கூரை வீடு தீப்பற்றி எரிந்த விபத்தில் மூதாட்டி பரிதாப பலி!
செய்திகள்

உள்பக்கம் தாழிடப்பட்டிருந்த கூரை வீடு தீப்பற்றி எரிந்த விபத்தில் மூதாட்டி பரிதாப பலி!

🕒 15 நவ., 2026, 11:41 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
உள்பக்கம் தாழிடப்பட்டிருந்த கூரை வீடு தீப்பற்றி எரிந்த விபத்தில் மூதாட்டி பரிதாப பலி! - படம் 1 - The News Outlook
📸1 / 3
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (3)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீராநல்லூரில் கூரை வீடு தீப்பற்றி எரிந்த விபத்தில் மூதாட்டி நூர்ஜகான் உடல் கருகி உயிரிழந்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கூரை வீடு தீப்பற்றி எரிந்த விபத்தில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

சீர்காழி தாலுக்கா கீராநல்லூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் நூர்ஜகான் (60). இவரது கணவர் அப்துல் ஜலீஸ் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களின் மகள் நிஷா பேகம் (44) என்பவருக்கு திருமணமாகி, கணவர் சாதிக் பாட்ஷாவுடன் ஊட்டியில் வசித்து வருகிறார். இந்நிலையில், உறவினர்களின் உதவியுடன் கீராநல்லூரில் உள்ள கூரை வீட்டில் நூர்ஜகான் தனியாக வசித்து வந்துள்ளார்.

நேற்று இரவு சமைத்து சாப்பிட்டுவிட்டு அவர் தூங்கச் சென்றுள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது, நூர்ஜகானின் வீடு தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. வீட்டின் கதவு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்ததால், நூர்ஜகானை உடனடியாக மீட்க முடியவில்லை.

தகவலறிந்து விரைந்து வந்த சீர்காழி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் வீடு முழுமையாக எரிந்து சாம்பலானதுடன், தீயில் கருகி நூர்ஜகான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
குத்தாலத்தில் எண்ணெய் கிணறு பராமரிப்பு: நிலத்தடி நீர் மாசுபடுவதாக மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டுசெய்திகள்

குத்தாலத்தில் எண்ணெய் கிணறு பராமரிப்பு: நிலத்தடி நீர் மாசுபடுவதாக மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டு

SASHVI🕒 நவ. 22
சொகுசு காரில் குட்கா கடத்தல்: ஈரோட்டில் அதிரடி வேட்டை!செய்திகள்

சொகுசு காரில் குட்கா கடத்தல்: ஈரோட்டில் அதிரடி வேட்டை!

Dinesh🕒 நவ. 22
குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!செய்திகள்

குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!

NESARAJAN🕒 நவ. 22
ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!செய்திகள்

ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!

NESARAJAN🕒 நவ. 22
திருவாரூரில் 18 மாதங்களாகப் பூட்டிக் கிடக்கும் நீச்சல் குளம்: புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கைசெய்திகள்

திருவாரூரில் 18 மாதங்களாகப் பூட்டிக் கிடக்கும் நீச்சல் குளம்: புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை

NESARAJAN🕒 நவ. 22
பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!ஆன்மீகம்

பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!

VASANTHA🕒 நவ. 22
11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!அரசியல்

11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!

VASANTHA🕒 நவ. 22
மீனவர் தின கொண்டாட்டம்: தூத்துக்குடியில் குவிந்த மீனவர்கள்!செய்திகள்

மீனவர் தின கொண்டாட்டம்: தூத்துக்குடியில் குவிந்த மீனவர்கள்!

JOWIN AKASH🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔