குதிரை பேரம் புகார் தொடர்பாக மதுரை முன்னாள் துணை மேயர் பி.எம். மன்னன் இன்று மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். மதுரை மத்திய தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. முஸ்தபா அளித்த புகாரில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தொடர் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் போலீசார் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரித்து வருகின்றனர்.
செய்திகள்
முன்னாள் துணை மேயர் மன்னன் விசாரணைக்கு ஆஜர்
🕒 7 நவ., 2026, 07:13 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1








