Settings

முகப்பு/செய்திகள்/காப்பீட்டுத் தொகை விவகாரம்: ஊர் முக்கியஸ்தரிடம் புகார் அளித்தவர்கள் மீது சரமாரி தாக்குதல்!
செய்திகள்

காப்பீட்டுத் தொகை விவகாரம்: ஊர் முக்கியஸ்தரிடம் புகார் அளித்தவர்கள் மீது சரமாரி தாக்குதல்!

🕒 27 நவ., 2026, 03:21 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
காப்பீட்டுத் தொகை விவகாரம்: ஊர் முக்கியஸ்தரிடம் புகார் அளித்தவர்கள் மீது சரமாரி தாக்குதல்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே விபத்து காப்பீட்டுத் தொகை விவகாரத்தில் ஊர் முக்கியஸ்தர்களிடம் புகார் அளித்த ஆஞ்சின் மற்றும் சாந்தி ஆகியோர் தாக்கப்பட்டுள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப்பட்டி பகுதியில், விபத்து காப்பீட்டுத் தொகை விவகாரத்தில் ஊர் முக்கியஸ்தர்களிடம் புகார் தெரிவித்ததாகக் கூறி, ஆண் மற்றும் பெண் மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவேரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆஞ்சின் (52) மற்றும் சாந்தி (48). இவர்களது குடும்பத்தைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு விபத்தில் உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கில் நீதிமன்றத்தின் மூலம் மொத்தம் ரூ.31 லட்சம் காப்பீட்டுத் தொகை பெறப்பட்டுள்ளது. இதில் தமிழரசனின் மனைவி சங்கரிக்கு ரூ.17 லட்சமும், தமிழரசனின் மகன்களான ஹரி மற்றும் சந்துரு பெயரில் ரூ.11 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழரசனின் தாய் மற்றும் தந்தைக்கு ரூ.3 லட்சம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் வாதாடி காப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தந்த வழக்கறிஞர் நடராஜனுக்கு உரிய தொகையை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கு முடிவடைந்ததும் அந்தப் பணத்தை வழங்க மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கறிஞர் ஊர் கவுண்டரிடம் புகார் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, ஊர் முக்கியஸ்தர்கள் வழக்கறிஞருக்குச் சேர வேண்டிய பணத்தை வழங்குமாறு தமிழரசனின் மனைவி சங்கரியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த தமிழரசனின் மகன்களான ஹரி, சந்துரு, சிவகுமார், விக்கி உள்ளிட்ட ஐவர் கொண்ட கும்பல், எதற்காக ஊர் முக்கியஸ்தர்களிடம் சென்று புகார் அளித்தீர்கள் எனக் கேட்டு ஆஞ்சின் மற்றும் சாந்தியை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது விரைந்து விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தேசிய பால் தினம்: ஆவின் பால் முகவர்கள் சங்கம் சார்பில் அன்னதானம்!செய்திகள்

தேசிய பால் தினம்: ஆவின் பால் முகவர்கள் சங்கம் சார்பில் அன்னதானம்!

Srinivasan🕒 நவ. 26
குடிபோதையில் அட்டகாசம்! காரை வழிமறித்து VAO மற்றும் முன்னாள் ராணுவ வீரரிடம் வழிப்பறி செய்த கும்பல் கைது!செய்திகள்

குடிபோதையில் அட்டகாசம்! காரை வழிமறித்து VAO மற்றும் முன்னாள் ராணுவ வீரரிடம் வழிப்பறி செய்த கும்பல் கைது!

ARAVINDHAN🕒 நவ. 26
100 நாள் வேலை கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை - அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் வாபஸ்செய்திகள்

100 நாள் வேலை கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை - அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் வாபஸ்

VASANTHA🕒 நவ. 26
பள்ளி சமையலறையில் பதுங்கிய 7 அடி பாம்பு.. லாவகமாக பிடித்த வனத்துறையினர்!செய்திகள்

பள்ளி சமையலறையில் பதுங்கிய 7 அடி பாம்பு.. லாவகமாக பிடித்த வனத்துறையினர்!

Dinesh🕒 நவ. 26
மிரள வைத்த 10 அடி மலைப்பாம்பு... தீயணைப்புத் துறையினர் அதிரடி மீட்பு!நகரங்கள்

மிரள வைத்த 10 அடி மலைப்பாம்பு... தீயணைப்புத் துறையினர் அதிரடி மீட்பு!

Ramachandran🕒 நவ. 27
முதியவர்களுடன் உணவு உண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடிய திமுகவினர்!நகரங்கள்

முதியவர்களுடன் உணவு உண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடிய திமுகவினர்!

SASHVI🕒 நவ. 27
மாணவர்களுடன் கேக் வெட்டி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடிய திமுகவினர்!நகரங்கள்

மாணவர்களுடன் கேக் வெட்டி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடிய திமுகவினர்!

ARAVINDHAN🕒 நவ. 27
ஐயங்குளத்தில் பவனி வந்த பராசக்தியம்மன்! திருவண்ணாமலை தீபத் திருவிழா ஹைலைட்ஸ்!நகரங்கள்

ஐயங்குளத்தில் பவனி வந்த பராசக்தியம்மன்! திருவண்ணாமலை தீபத் திருவிழா ஹைலைட்ஸ்!

Srinivasan🕒 நவ. 27
TNO வாட்ஸ்அப் சானல் ➔