திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சபரிமலைக்குச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில், அதில் பயணம் செய்த 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (37), யுவ பிரகாஷ் (35), ராகேஷ் (32) மற்றும் கார் ஓட்டுநர் ருத்ரகுமாரன் (35) ஆகிய நான்கு பேரும் காரில் சென்னையிலிருந்து கேரளா மாநிலம் சபரிமலை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பயணித்த கார் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மறவனூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த நான்கு பேரும் காயமடைந்தனர். அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள், விபத்தில் சிக்கித் தவித்த நான்கு பேரையும் மீட்டு உடனடியாக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மணப்பாறை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகள்
சபரிமலை யாத்திரை சென்றோர்க்கு நேர்ந்த சோகம்: மணப்பாறை அருகே கார் கவிழ்ந்து விபத்து!
🕒 27 நவ., 2026, 03:21 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
✨
AI Highlights
- •திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சபரிமலை சென்ற கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








