Settings

முகப்பு/செய்திகள்/திருஷ்டி சுத்திப்போட்ட எலுமிச்சம்பழத்தால் தகராறு.. அரிவாளால் வெட்ட முயன்ற வீடியோ
செய்திகள்

திருஷ்டி சுத்திப்போட்ட எலுமிச்சம்பழத்தால் தகராறு.. அரிவாளால் வெட்ட முயன்ற வீடியோ

🕒 7 நவ., 2026, 06:30 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திருஷ்டி சுத்திப்போட்ட எலுமிச்சம்பழத்தால் தகராறு.. அரிவாளால் வெட்ட முயன்ற வீடியோ - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருப்பூர் மன்னரை பகுதியில் எலுமிச்சம்பழம் உருட்டியதால் ஏற்பட்ட தகராறில் ஒர்க்ஷாப் உரிமையாளரை இளநீர் கடைக்காரர் கத்தியால் தாக்கிய பரபரப்பு வீடியோ.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பூர் மன்னரை பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவர் கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் இருசக்கர வாகன பழுது நீக்கம் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடையில் திருஷ்டி நீக்குவதற்காக கண்ணாடி டம்ளரில் எலுமிச்சை போட்டு தண்ணீர் ஊற்றி வைப்பது வழக்கமானது. இதனை வெள்ளிக்கிழமை தோறும் மாற்றி வந்துள்ளார் அதுபோல நேற்று எலுமிச்சையை மாற்றுவதற்காக அதனை எடுத்து சாலையில் எரிந்துள்ளார். அது சாலையில் உருண்டு சென்று அருகில் இருந்த வெள்ளைதுரை ஏன்பவரின் இளநீர் கடை முன்பாக நின்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வெள்ளைதுரை வினோத் கடைக்குச் சென்று பார்த்துள்ளார். பூ வாங்கிக்கொண்டு திரும்பி வந்த வினோத்திடம் எலுமிச்சம் பழத்தை எனது கடைக்கு முன்பாக ஏன் உருட்டி விட்டாய் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் மேலும் இதனை வெட்ட வைத்திருந்த கத்தியை கொண்டு வினோத்தை கடுமையாக தாக்கியுள்ளார் அரிவாள் திருப்பி பிடித்து வெட்டப்பட்டதால் ரத்த காயம் இன்றி வினோத் உயிர் தப்பினர் இதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் இருவரையும் விளக்கி விட்டனர். இதனைத் தொடர்ந்து உள் காயம் அடைந்த வினோத் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த சம்பவம் தொடர்பாக ஊத்துக்குளி போலீஸ் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளநீர் கடைக்காரர் எலுமிச்சை உருட்டிவிட்ட ஒர்க்ஷாப் உரிமையாளரை துரத்தி துரத்தி அறிவாளால் தாக்கிய வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
குத்தாலத்தில் எண்ணெய் கிணறு பராமரிப்பு: நிலத்தடி நீர் மாசுபடுவதாக மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டுசெய்திகள்

குத்தாலத்தில் எண்ணெய் கிணறு பராமரிப்பு: நிலத்தடி நீர் மாசுபடுவதாக மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டு

SASHVI🕒 நவ. 22
சொகுசு காரில் குட்கா கடத்தல்: ஈரோட்டில் அதிரடி வேட்டை!செய்திகள்

சொகுசு காரில் குட்கா கடத்தல்: ஈரோட்டில் அதிரடி வேட்டை!

Dinesh🕒 நவ. 22
குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!செய்திகள்

குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!

NESARAJAN🕒 நவ. 22
ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!செய்திகள்

ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!

NESARAJAN🕒 நவ. 22
திருவாரூரில் 18 மாதங்களாகப் பூட்டிக் கிடக்கும் நீச்சல் குளம்: புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கைசெய்திகள்

திருவாரூரில் 18 மாதங்களாகப் பூட்டிக் கிடக்கும் நீச்சல் குளம்: புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை

NESARAJAN🕒 நவ. 22
பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!ஆன்மீகம்

பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!

VASANTHA🕒 நவ. 22
11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!அரசியல்

11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!

VASANTHA🕒 நவ. 22
மீனவர் தின கொண்டாட்டம்: தூத்துக்குடியில் குவிந்த மீனவர்கள்!செய்திகள்

மீனவர் தின கொண்டாட்டம்: தூத்துக்குடியில் குவிந்த மீனவர்கள்!

JOWIN AKASH🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔