கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மற்றும் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற புரட்சி பாரதம் கட்சியினர் 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்ற புரட்சி பாரதம் கட்சியினர், குறிப்பிட்ட அதிகாரிகள் மீதான புகார்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.









