Settings

முகப்பு/செய்திகள்/சாலையை சீரமைக்க கோரி ஆட்சியரிடம் மனு அளித்த பள்ளி மாணவர்கள் - திருவாரூரில் நெகிழ்ச்சி
செய்திகள்

சாலையை சீரமைக்க கோரி ஆட்சியரிடம் மனு அளித்த பள்ளி மாணவர்கள் - திருவாரூரில் நெகிழ்ச்சி

🕒 23 நவ., 2026, 10:28 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சாலையை சீரமைக்க கோரி ஆட்சியரிடம் மனு அளித்த பள்ளி மாணவர்கள் - திருவாரூரில் நெகிழ்ச்சி - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சேதமடைந்த சாலை மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்யக் கோரி பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள செம்பியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவும் அடிப்படை வசதி குறைபாடுகளைச் சரிசெய்யக் கோரி, பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

செம்பியமங்கலம் முதல் வடக்கு ஒத்தத்தெரு வரையிலான சுமார் 3 கிலோமீட்டர் சாலை, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது இந்தச் சாலை முற்றிலும் சேதமடைந்து, குண்டும் குழியுமாகக் காட்சியளிப்பதால், தினந்தோறும் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பணிக்குச் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலையில் உள்ள பள்ளங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும், வடக்கு ஒத்தத்தெரு பகுதியில் வசிக்கும் 42 குடும்பங்களுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால், அப்பகுதி மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகின்றனர். அத்துடன், சாலையோர மின்கம்பங்களில் உள்ள தெருவிளக்குகள் முறையாக எரியாததால், இரவு நேரங்களில் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, பள்ளி மாணவர்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரனை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மாணவர்களின் புகாரைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
கேங்மேன் பணியாளர்கள் மாநிலம் தழுவிய போராட்டம்: கள உதவியாளர்களாக மாற்றக் கோரிக்கைசெய்திகள்

கேங்மேன் பணியாளர்கள் மாநிலம் தழுவிய போராட்டம்: கள உதவியாளர்களாக மாற்றக் கோரிக்கை

SRIDHAR🕒 நவ. 23
பறவை காய்ச்சல் எதிரொலி: ஓமன் நாட்டில் இந்திய முட்டை இறக்குமதிக்கு தடை!செய்திகள்

பறவை காய்ச்சல் எதிரொலி: ஓமன் நாட்டில் இந்திய முட்டை இறக்குமதிக்கு தடை!

SRIDHAR🕒 நவ. 23
பணம் கிடைக்காத ஆத்திரத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் பூச்சி மருந்துடன் குதித்த விவசாயிகள்!செய்திகள்

பணம் கிடைக்காத ஆத்திரத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் பூச்சி மருந்துடன் குதித்த விவசாயிகள்!

Vijayaragavan🕒 நவ. 23
நடமாடும் இ-சேவை வாகனம் தொடக்கம்: மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்தமிழ்நாடு

நடமாடும் இ-சேவை வாகனம் தொடக்கம்: மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

NESARAJAN🕒 நவ. 23
அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை முடிக்கக் கோரி அலுவலகம் முற்றுகைநகரங்கள்

அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை முடிக்கக் கோரி அலுவலகம் முற்றுகை

Muralidharan🕒 நவ. 23
பொருட்காட்சி டெண்டர் விவகாரம்: மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு பொருட்காட்சி நலச் சங்கம் மனுநகரங்கள்

பொருட்காட்சி டெண்டர் விவகாரம்: மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு பொருட்காட்சி நலச் சங்கம் மனு

Muralidharan🕒 நவ. 23
30 நாட்களுக்குள் மழைநீர் சேகரிப்பு அமைக்கலனா நடவடிக்கை! திருவையாறு நகராட்சி அதிரடி உத்தரவு!நகரங்கள்

30 நாட்களுக்குள் மழைநீர் சேகரிப்பு அமைக்கலனா நடவடிக்கை! திருவையாறு நகராட்சி அதிரடி உத்தரவு!

Rajan🕒 நவ. 23
காவல் நிலையத்திற்கு அருகிலேயே நடக்கும் அராஜகம்... விழுப்புரம் சிக்னலில் தொடரும் விபத்துகள்!நகரங்கள்

காவல் நிலையத்திற்கு அருகிலேயே நடக்கும் அராஜகம்... விழுப்புரம் சிக்னலில் தொடரும் விபத்துகள்!

Arivazhagan🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔